July 6, 2011 | no comments
எஸ்பி ஜனநாதன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கிறார்கள்.தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த அதிரடிப் படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், “ஈ படம் முடிந்ததும், இன்னொரு படம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என்று ஜீவாவும், நானும் திட்டமிட்டோம்.
அதேபோல் பேராண்மை முடிந்ததும், ஜெயம் ரவியோடு இன்னொரு படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்போதுதான் அதற்கான காலம் கனிந்து இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு பேரையும் இணைத்து இயக்கும் திட்டம் கைகூடியிருக்கிறது.
ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம். ஏற்கனவே ஜீவா நடித்த ஈ, கோ ஆகிய படங்கள் தெலுங்கில் `டப்’ செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது. `பேராண்மை’ படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது.
எனவே ஜெயம் ரவியும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும்,” என்றார்.
0 comments:
Post a Comment