Tuesday, July 5, 2011

சக்சேனாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை- நீதிபதி

July 6, 2011 | no commentsகைது செய்யப்பட்டுள்ள சன் பிக்ஸர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் எதையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அவரை இரு தினங்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக சேலம் விநியோகஸ்தர் கந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சக்சேனா கைது செய்யப்பட்டார். இன்று அவரை போலீஸ் காவலில் எடுக்க சைதை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அகிலா சாந்தினி, சக்ஸேனா மீதான புகாருக்கு இதுவரை போலீசார் ஆதாங்களை சமர்ப்பிக்கவில்லையே என்றார்.

இந்த வழக்கு பொய்யானது என்று சக்ஸேனா தரப்பில் வாதிட்டனர். புகார் கொடுத்த விநியோகஸ்தர் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் அல்லது ஆதாரங்களை காட்டினால், அவர் கேட்கும் தொகையைத் தந்துவிடுவதாகவும் சக்ஸேனா தரப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சக்ஸேனாவை இரு தினங்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்தார். இந்த நாட்களில் அவரை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment