Thursday, July 28, 2011

சென்னையில் நடிப்புப் பயிற்சி நிறுவனம்-ராதிகாவுடன் தொடங்கினார் அனுபம் கெர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர் ப்ரிபேர்ஸ் என்ற நடிப்பு பயிற்சி நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ராடன் டி.வியும் இணைந்து சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை கையெழுத்தானது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார்கள் அனுபம் கெர், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்.

முப்பத்தியேழு வருடங்களுக்கு முன் இதே ஜுலையில்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சியை ஆரம்பித்தேன். இன்று அதே ஜுலையில் சென்னையில் நடிப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அனுபர்கெர்.

அகமதாபாத், சண்டிகர் என்ற இரு இடங்களில் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வரும் இவர், சென்னையிலும் கிளை துவங்க காரணமாக இருந்திருக்கிறது ராடர்ன் டிவி.

மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம். இதில் பத்து நாட்கள் அனுபம் கெரெ வந்து வகுப்பெடுப்பாராம். ராதிகாவும் வகுப்புகள் நடத்துவார். அது போகட்டும்... முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் ராதிகா.

ஏற்கெனவே கூத்துப் பட்டறை என்ற அமைப்பு வேறு இதே வேலையை செய்து கொண்டிருக்கிறதே என்று அனுபம் கெர் - ராதிகாவிடம் கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு ரொம்ப சிம்பிளாக சொன்னார்கள் பதிலை: இங்கே அனுபம் கெரும் ராதிகாவும் இருக்கிறார்கள். அங்கே இல்லை. அதான் வித்தியாசம் என்றனர்.

டிப்ளமா, சர்ட்டிபிகேட் மற்றும் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் தனிப் பயிற்சி என மூன்று பிரிவுகளை இப்போதைக்கு வைத்துள்ளார்களாம்.Topics: radhika, anupam kher, raadan media, ராடான், அனுபம் கெர், ராதிகா

0 comments:

Post a Comment