ஹைதராபாத்: வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜ்.
நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது.
கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார்.
மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அரசு ஊழியரான அவரது மாமியார் சர்வ மங்களா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆனால் சிரிஷ் பரத்வாஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை வரும் 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சல்குடா என்ற ஜெயிலில் சிரிஷ் பரத்வாஜ் அடைக்கப்பட்டார்.Topics: வரதட்சணை, chiranjeevi, சிரஞ்சீவி மருமகன், chiranjeevi son in law, andhra pradesh, dowry case
0 comments:
Post a Comment