பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி நடிகை நிகிதாவுக்கு கன்னட படங்களில் நடிக்க 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பூசலுக்காக ஒரு நடிகைக்கு தடை விதிக்கப்படுவது இந்தியா திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று தெரிகிறது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை கொடுமைப்படுத்தியதற்காக கடந்த 9-ம் தேதி கைது செய்யபப்ட்டார். அவர் மனைவி கொடுத்த புகாரில் நடிகை நிகிதா பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த புகாரை விஜயலக்ஷ்மி வாபஸ் பெற்றார்.
இதையடுத்து கன்னட தயாரிப்பபாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்திய நடிகை நிகிதாவுக்கு கன்னட படங்களில் நடிக்க 3 ஆண்டு தடை விதிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை சங்கத்தின் துணை தலைவர் முனிரத்னா அறிவித்தார்.
நடிகர் தர்ஷனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியதற்கு நிகிதா தான் காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று நடிகரும், தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார். நிகிதா மீது கடுமையான நடிவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதனால் தான் இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவரை எந்த கன்னட தயாரிப்பாளரும் தங்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நடிகை நிகிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் வம்ஷி, பிரின்ஸ், யோதா, நரிய சீரே கதா, சங்கொல்லி ராயன்னா ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே, நான் தர்ஷனுடன் தொடர்பு வைத்துள்ளேன் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதாரம் கொடுக்கட்டும் நானே கன்னடா திரையுலகை விட்டுச் சென்றுவிடுகிறேன் என்று நிகிதா தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகரின் குடும்பத்தில் ஏற்பட்ட பூசலுக்காக ஒரு நடிகைக்கு தடை விதிக்கப்படுவது இதுவரை திரையுலகம் காணாத விஷயமாக கருதப்படுகிறது.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}
0 comments:
Post a Comment