Wednesday, September 7, 2011

பாலிவுட் ரஜினிகாந்த் சல்மான் கான்: சினிமா வர்த்தக நிபுணர்கள்

பாலிவுட்டின் ரஜினிகாந்த் சல்மான் கான் என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான வாண்டட், தபாங் மற்றும் பாடிகார்ட் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதிலும் பாடிகார்ட் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளதாம். படம் ரிலீஸான 5 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து வர்த்தக ஆய்வாளர்கள் சல்மானை தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் ஒப்பிடுகின்றனர்.

இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாலிவுட் திரையுலக வர்த்தக நிபுணர் கோமல் நாத்தா கூறியதாவது,

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகை அன்று சல்மான் படங்கள் ரிலீஸ் ஆகின. அனைத்தும் ஹிட்டானதற்கு பண்டிகை, சல்மான் மற்றும் அவரது அதிரடி ஆக்ஷன் தான் காரணம். பொதுவாக ரம்ஜான் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் வசூல் வெகுவாக குறைந்துவிடும். ஆனால் பாடிகார்ட் 6-வது நாளில் கூட வசூலை அள்ளிக் குவித்துள்ளது என்றார்.

வர்த்தக ஆய்வாளர் சஞ்சய் கை கூறுகையில், பாடிகார்ட் ரிலீஸ் ஆகும் நாளில் அனுராக் கஷ்யப் தனது படத்தை வெளியிட்டிருக்கக் கூடாது. பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள போல் படத்தின் வெளியீட்டுத் தேதி கூட மாற்றப்பட்டது. வேறு நாளில் வெளியிடுவதால் நல்ல வசூல் கிடைக்கும். ஆனால் தற்போது வேறு எந்த படமும் ஓடும் வாய்ப்பில்லை. முதன்முறையாக ஒரு படம் பட்டி, தொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடுவது இப்போதுதான் என்றார்.

படம் வெளியான சில நாட்களிலேயே வசூலை அள்ளிக் குவித்துள்ளதால் நிபுணர்கள் சல்மானை ரஜினிகாந்துடன் ஒப்பிடுகின்றனர். சல்மானுக்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி உயிருக்கு உயிரான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதுவே சல்மானின் இந்தப் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள். .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment