Wednesday, September 7, 2011

செக் மோசடி: நீதிமன்றத்தில் சரணடைய நடிகைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் சரணடையுமாறு பழைய நடிகை சொர்ணாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா. இவர் 1996ம் ஆண்டு சினிமா பைனான்சியர் போத்ராவிடம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பி செலுத்த செக் கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து சொர்ணா மீது சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா மோசடி வழக்கு தொடர்ந்தார். அப்போது சொர்ணா கோர்ட்டில் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தார். மீதிப்பணத்தை செலுத்தாததால் அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து செசன்ஸ் கோர்ட்டில் சொர்ணா அப்பீல் செய்தார்.

அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி, சொர்ணாவின் ஜெயில் தண்டனையை 3 மாதங்களாகக் குறைத்து உத்தரவிட்டார். மீதிப்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சொர்ணா அப்பீல் செய்தார். அங்கு மனு தள்ளுபடியானதால் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் போத்ராவுக்கு தர வேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து விட்டேன். நான் இதில் பாதிக்கப்பட்டுள்ளேன். பெண் என்பதால் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீதிபதி சுதந்திரகுமார் இந்த மனுவை விசாரித்தார். சொர்ணாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் 4 வாரளுக்குள் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்பீல் மனு மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment