Saturday, December 17, 2011

அமெரிக்காவில் 25 வயதுக்கு முன்பே பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனா்.

« உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள்! சிசேரியன் எதற்காக? » அமெரிக்காவில் 25 வயதுக்கு முன்பே பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனா்.Published December 17, 2011 வாஷிங்டன் : அமெரிக்க பெண்களில் 5ல் ஒருவர், வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பாலியல் தொந்தரவு குறித்து அமெரிக்காவில் சிடிசி அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: அமெரிக்காவில் மறைந்திருந்து நோட்டமிடுதல் மற்றும் பின்தொடரும் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கொலை அல்லது தாக்குதலுக்கு ஆளாகுவோம் என்று 5ல் 1 பெண் அஞ்சுகிறார்.

அமெரிக்காவில் நிமிடத்திற்கு சராசரியாக 24 பெண்கள் பலாத்காரம், உடல் ரீதியான துன்புறுத்தல் அல்லது மர்மநபர்கள் நோட்டமிடுவதால் பாதிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 70 சதவீதம் பேர் 25 வயதுக்கு முன்பே நெருங்கிய உறவினரால் பாதிக்கப்பட்டதாகவும், 80 சதவீதம் பேர் 25வயதுக்கு முன்பே பாலியல் தாக்குலுக்கு ஆளாகியதும் ஆய்வில் தெரியவந்தது.

0 comments:

Post a Comment