Saturday, December 17, 2011

முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும்

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » முட்டை மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும்Published December 17, 2011 மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.

வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம்.  தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது.  இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும்.

இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது.  இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது.  இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

0 comments:

Post a Comment