« தேன் ஒர் அற்புதமான மருந்து! உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள்! » ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினிPublished December 31, 2011 பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் நடித்தவர் மதுஷாலினி. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் இந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மெண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி இப்படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மதுஷாலினி. இந்த படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் வில்லி வேடத்தில் முதன்முறையாக நடிக்கிறேன். அதற்காக எனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக என்னை தினமும் 20 சிகரெட் வரை பிடிக்க வைக்கிறார். கதைக்கு தேவை என்பதால் சிகரெட் பிடித்தபடி நடித்து வருகிறேன். சிகரெட் வாடையே பிடிக்காத நான் ஒரு மாதமாக தினமும் 20 சிகரெட் வரை பிடித்து கஷ்டப்பட்டு வருகிறேன் என்கிறார் மதுஷாலினி.
0 comments:
Post a Comment