Sunday, January 1, 2012

டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளது

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளதுPublished December 31, 2011 உலக அளவில் எரிபொருள் விலை எகிறிக்கொண்டு செல்வதால், குறைந்தளவு எரிபொருள் பயன்படுத்தும் கார்களுக்கே தற்போது டிமான்ட் உள்ளது.

போட்டி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், கார் மார்க்கெட்டில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த அறிமுகம் உதவும் என்று எதிர்பார்க்கிறது டொயோட்டா.

நேற்று விற்பனைக்கு விடப்பட்டுள்ள கார், ‘Aqua’ மாடல் காராக ஜப்பானிலும், மற்றைய நாடுகளில்

டோக்கியோவில் நேற்று (திங்கட்கிழமை) அறிமுகப்படுத்தியபோது..

‘Prius C’ மாடல் காராகவும் விற்கப்படவுள்ளன. ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 35.4 கி.மீ. (35.4 km/litre) கொடுக்கும் விதத்தில் இதன் தொழில்நுட்பம் உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா. இதுவரை டொயோட்டா விற்பனை செய்துவந்த அதிஉச்ச எரிபொருள் சிக்கன Prius கார், 32 km/litre தொழில்நுட்பம் உடையது.

டொயோட்டோவின் போட்டியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அவை இன்னமும் மார்க்கெட் ஷேரில் பெரிய சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடியாமல், குறைந்தளவு விற்பனை இலக்கங்களையே காட்டுகின்றன. நிசான் டோட்டர்ஸ் தயாரித்துள்ள லீஃப் மாடல் மற்றும், ஜி.எம். போட்டர்ஸ் தயாரித்துள்ள வோல்ட் ஆகிய மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு ஓகோ என்று இல்லை.

 அதற்கு முக்கிய காரணம், அவற்றின் பேட்டரிகளின் உச்ச விலை! எரிபொருளில் சேமிக்கும் பணம் பேட்டரியில் போய்விடுகிறது.டொயோட்டா நேற்று அறிமுகப்படுத்தியுள்ள மாடல், ஜப்பானில் அறிமுக விலையாக 1.60 மில்லியன் யென் (சுமார் 10 லட்சம் இந்திய ரூபா) விலைப் பட்டியலுடன் வெளியாகியுள்ளது. மாதம் ஒன்றுக்கு 12,000 கார்களை விற்பனை செய்ய முடியும் என்கின்றன அவர்களது ஆரம்ப காட்ட கணிப்பீடுகள்.

0 comments:

Post a Comment