July 6, 2011 | no comments
ரம்யா கிருஷ்ணனும், த்ரிஷாவும் ஒரு ‘பார்ட்டி பறவைகள்’ என்பதை ஊரே அறியும். மாசா மாசம் வருகிற பவுர்ணமி லேட் அடித்தாலும் அடிக்கும். இவர்களின் பார்ட்டி மட்டும் நடக்காமல் இருந்ததே இல்லை. அந்தளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்குள் நடுக்கமே வருகிற அளவுக்கு ஒரு மனத்தாங்கல்.ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி தெலுங்கில் முக்கியமான இயக்குனர். இவரது இயக்கத்தில் த்ரிஷா நடிப்பதாக ஒரு பேட்டியில் கூறிவிட்டார் ரம்யா கிருஷ்ணன்.நமக்குள் இருக்கும் நட்பு வேறு. தொழில் வேறு. என்னிடம் கதையே சொல்லவில்லை கிருஷ்ண வம்சி. கால்ஷீட்டும் கேட்கவில்லை. உண்மை அப்படியிருக்க, நான் அவர் படத்தில் நடிக்கிறேன் என்று ரம்யா எப்படி சொல்லலாம்? இதுதான் த்ரிஷாவுக்கு வருத்தமாம். தனது ஆதங்கத்தை நேரடியாக ர.கி க்கு போன் போட்டு சொல்லிவிட்டாராம்.ஏதோ டாக்டர் சீனிவாசன் படத்தில் நடிக்க அழைத்த மாதிரி ஏன் இந்த குதி குதிக்கிறார் த்ரிஷா? அதுதான் யாருக்கும் புரியவில்லை.
0 comments:
Post a Comment