Wednesday, July 6, 2011

சகுனி நாயகி ப்ரணிதா

July 6, 2011 | no comments

‘சிறுத்தை’ படத்தின் வரவேற்பை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் ‘சகுனி’. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில் நாயகி யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்ட நிலையில் கார்த்தியின் நாயகி யார் என்ற பேச்சுகள் தமிழ் திரையுலகில் வலம் வந்தன. படத்தின் இயக்குனரோ ஒரு புதுமுக நாயகி தான் எங்களின் தேர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.


தற்போது அருள்நிதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘உதயன்’ படத்தின் நாயகியான ப்ரணிதா தான் ‘சகுனி’யில் கார்த்தியின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘உதயன்’ திரைப்படம் சரியான வரவேற்பை பெறவிட்டாலும் ‘சகுனி’ படம் தனக்கு தமிழ் சினிமாவில் தனக்கு தகுந்த வரவேற்பை கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம் ப்ரணிதா.

0 comments:

Post a Comment