July 7, 2011 | no comments
‘யுத்தம் செய்’ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்க இருக்கும் படம் ‘முகமூடி’. இப்படத்தில் ஜீவா நாயகனாகவும், நரேன் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார்கள்.‘யுத்தம் செய்’ படத்திற்கு இசையமைத்த கே என்பவர் இப்படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் குறித்து அமலா பாலிடம் யாராவது கேட்டால் ‘முகமூடியா..? அப்படின்னு ஒரு படமா? ” என்று கேட்கிறாராம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் யுடிவி பொறுப்பாளர் தனஞ்செயன் ” முன்னணி நாயகிகளிடம் பேசி வருகிறோம். ஆனால் அமலாபாலிடம் இன்னும் பேசவில்லை. இன்னும் ஒரிரு நாட்களில் இது குறித்து அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment