Sunday, July 24, 2011

நடிகர் ரவிச்சந்திரன் தொடர்ந்து கவலைக்கிடம்

நடிகர் ரவிச்சந்திரனின் உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 5 நாட்களாக கோமாவில் உள்ளார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.Topics: ரவிச்சந்திரன், ravichandran, கவலைக்கிடம், தீவிர சிகிச்சை

0 comments:

Post a Comment