பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வீட்டில் மீண்டும் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனை நாளை நடக்கவிருக்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி காலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 80 அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த சோதனைகளில் ரொக்கம், ஆவணங்கள், யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.
இதில் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இருந்து மட்டும் ரூ. 20 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனைகள் நடந்தபோது மம்முட்டி சென்னையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொச்சி சென்ற அவரிடம் வருமான வரித்துறையினர் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
அவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படும் என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை மீண்டும் மம்முட்டி வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.Topics: mammootty, it raid, ஐடி ரெய்டு, மம்முட்டி, வருமான வரித்துறை, it officials
0 comments:
Post a Comment