Sunday, July 24, 2011

வி.சி.குகநாதன் ராஜினாமா: 'பெப்சி' தலைவராக எம்.ஏ.ராமதுரை தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) தலைவராக இருந்த விசி குகநாதன் ராஜினாமா செய்துவிட்டதால், அவருக்கு பதில் புதிய தலைவராக வி ஏ ராமதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெப்சி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெப்சி தலைவர் பொறுப்பில் இருந்த வி.சி.குகநாதன் உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று (23-ந் தேதி) அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், புதிய தலைவராக எம்.ஏ.ராமதுரை தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பற்றி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பரில் பேசுவதற்கு, பேச்சுவார்த்தை குழு தலைவராக இயக்குனர் அமீர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தகவலை பெப்சி பொதுச்செயலாளர் ஜி.சிவா தெரிவித்துள்ளார்.Topics: fefsi, குகநாதன், tamil cinema, vc guhanathan, va ramadurai, பெப்சி

0 comments:

Post a Comment