தம்பி வெட்டோத்தி சுந்தரம்... கரண் நடித்து வெளியாகும் அடுத்த படம் இது. படத்தில் அவருக்கு ஜோடி அஞ்சலி.
இருவரும் இந்தப் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்தப் படக்குழுவினர் நேற்று நிருபர்களைச் சந்தித்து, படம் குறித்த பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் நாயகி அஞ்சலி கூறுகையில், "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் கரணுக்கு ஜோடியாக என்னை நடிக்க அழைத்தபோது, அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதால், எப்படி பழகுவாரோ என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், நான் பயந்தது போல் அவர் இல்லை. எனக்கு சவுகரியமான கதாநாயகனாக இருந்தார்.
எனக்கும், அவருக்கும் ஜோடிப்பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலைகாரா...' என்ற பாடல் காட்சியில், எங்கள் இருவரின் கூட்டணியும், படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும்.
இந்த வேடம், இந்த காஸ்ட்யூம் என்று எனக்கு எந்த பிடிவாதமும் இல்லை. நல்ல வேடம், காட்சிக்கேற்ற உடைகளை நான் அணிய தயங்கியதில்லை," என்றார்.
இந்தப் படம் நாகர்கோவில் அருகில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார்.
கரண் பேசும்போது, "தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை பார்த்தபின், அந்த படத்தை மறக்க முடியாது. 4 நாட்களுக்கு மனசுக்குள்ளேயே நிற்கும். அப்படி ஒரு பாதிப்பை படம் ஏற்படுத்தும்'' என்றார்.
அது என்ன வெட்டோத்தி...?
"வெட்டுக்கத்தி மாதிரி அது ஒரு ஆயுதம். ஆனால் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தைத் தரும்," என்றார்கள் இயக்குநர் வடிவுடையானும் தயாரிப்பாளர் செந்தில் குமாரும்.Topics: anjali, அஞ்சலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், thambi vettothi sundaram, கரண், karan
0 comments:
Post a Comment