Friday, July 22, 2011

பிந்து மாதவி, நித்யா மேனனின் 'வெப்பம்'

மனிதர்களின் மனதுக்குள் புதைந்து கிடக்கும் வெவ்வேறு வகையான வெப்பத்தை கதையாக்கி படமாக்கியுள்ளாராம் அஞ்சனா, தனது வெப்பம் படத்தில்.

அஞ்சனா, கெளதம் வாசுதேவ மேனனின் அசோசியேட்டாக இருந்தவர். இப்போது மேனனின் தயாரிப்பில் அஞ்சனா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் இரு நாயகிகள் பிந்து மாதவி மற்றும் நித்யா மேனன். நாயகனாக நடிப்பது கார்த்திக்குமார்.

அது என்ன வெப்பம் என்ற பெயரில் ஒரு கதை என்றுகேட்டால், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விதமான வெப்பம் புதைந்து கிடக்கும். ஏதாவது தக்க தருணத்தில் அது வெளியாகி வெடித்துப் புறப்படும்.

ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இந்த இறுக்கமான மன நிலையை வைத்துத்தான் படத்தை உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, குடும்பப் பாசம், மரணம் என அனைத்துமே நிரம்பியுள்ளது.

இது சுத்தமான சென்னைக் கதை. சென்னையின் வாழ்க்கையை இதில் பார்க்கலாம். இருப்பினும் அனைவருக்கும் இது பிடித்தமான படமாக இருக்கும் என்றார் அஞ்சனா.

படம் வரட்டும், பிடிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாம்!Topics: tamil cinema, veppam, வெப்பம், பிந்து மாதவி, bindu madhavi, nithya menon, நித்யா மேனன்

0 comments:

Post a Comment