சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய
சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார்.உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன் (இங்கே வாடா) என அதிகார மமதையில் தரக்குறைவாகப் பேசுகிறார் எனவும் படைதரப்பினர் தெரிவித்துள்ளனர்.தான் ஏதாவது படை முகாமுக்குச் சென்றால் தனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்கிறார். அத்துடன சேவா வனிதா பிரிவினால் நடத்தப்படும் பாலர் வகுப்புகளில் கல்வி பயிலும் இராணுவச் சிப்பாய்களின் பிள்ளைகளிடமிருந்து ஒரு தவணைக்கு என கட்டணமாகத் தலா 600 ரூபா அறவிடுகிறார் எனவும் திருமதி ஜயசூரிய மீது படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment