July 7, 2011 | no comments
அஜீத்தின் பில்லா -2 விரைவில் ஆரம்பம் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானபோது படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. பின்னர் இயக்குநர் விஷ்ணு வர்தன் இல்லை என்றானதும், நீரவ்ஷாவும் விலகிவிட்டார். அந்த இடத்துக்கு வந்தவர் பாலிவுட் கேமராமேன் ஹேமந்த் சதுர்வேதி.படப்பிடிப்பு தாமதமாவதால் தனது பாலிவுட் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக ஹேமந்த் கூறிவந்தார். இப்போது அவரும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான ஆர்டி ராஜசேகர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகியாக மும்பை மாடல் ஹ்யூமா குரேஷியும் முக்கிய வேடத்தில் விமலா ராமனும் நடிக்கிறார்கள். பிரபு, ரஹ்மான் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment