Thursday, July 7, 2011

விவாகரத்து முடிந்தது, கல்யாணம் எப்போ??

July 7, 2011 | no comments

ஒருவழியாக பிரபு தேவா – ரம்லத்துக்கு இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றம். 15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தான்.

அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா பேட்டியளித்ததால், கொதிப்படைந்த ரம்லத் நீதிமன்றம் போனார். ஆனால் ரம்லத் தனது மனைவியே அல்ல என வாதிட பிரபுதேவா தயாரானதால், வேறு வழியின்றி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார் ரம்லத்.

ரம்லத்துக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைக்க சம்மதித்தார் பிரபுதேவா. இந்த நடைமுறைகள் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் இன்று பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.

அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

“இப்போது ரம்லத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும்.

குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு.

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார். அண்ணா நகரில் வீடு, கிழக்குக் கடற்கரை சாலை நிலம், ஹைதராபாதில் இரு சொத்துகள் போன்றவற்றை இந்த விவாகரத்துக்கு ஈடாக ரம்லத்துக்கு கொடுத்துள்ளார் பிரபு தேவா.

0 comments:

Post a Comment