Thursday, July 7, 2011

சக்சேனா, தயாநிதி மாறனுக்கு எதிராக நித்தி வழக்கு

July 7, 2011 | no comments

நித்யானந்தாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என சன் குழுமத்துக்கு எதிரான காட்சிகள் அரங்கேறும் சூழலில் இந்தப் புகார் தரப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

2.3.2010 அன்று சன் டிவியில் இரவு எங்கள் ஆன்மீக குரு சுவாமி நித்யானந்தாவும், தமிழ் நடிகையும் இருப்பது போன்ற காட்சியை ஒளிபரப்பியது. இது உண்மையானதல்ல. போலியாக தயாரிக்கப்பட்ட இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்.

நித்யானந்தா மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் இவ்வாறு அந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்பட எங்கள் பீடத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளன. அங்கு யோகா வகுப்புகளும், ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த பீடங்கள் மீது சன் டிவியின் உதவியுடன் தாக்குதல் நடத்தினார்கள். ஆண், பெண் பக்தர்களையும் தாக்கினர்.

அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக 3.3.2010 அன்று சேலம் பெரியபுதூர், அழகாபுரம், சீர்காழி, சட்டநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமங்களில் குண்டர்கள் புகுந்து சன் டிவி கேமிராமேன்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். 2ந் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் ராஜபாளையம் ஆசிரமங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சன் டிவியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன.

சன் டிவி மீண்டும் மீண்டும் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதால் எங்கள் பீடம் மீது மக்களுக்கு தவறான கருத்து உருவாகியது. இந்துக்கள் உணர்வு புண்படுத்தப்பட்டது. முந்தைய ஆட்சியில் இது குறித்து புகார் செய்யப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுடைய செல்வாக்கு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சன் டிவி நிர்வாக இயக்குனரும், தலைவருமான கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி சக்சேனா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment