Thursday, June 30, 2011

கமலிடமிருந்து கழண்டு கொண்ட சோனாக்ஷி

June 30, 2011 | no comments

கமல் ஹாஸன் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்திலிருந்து அதன் நாயகி சோனாக்ஷி சின்ஹா விலகிவிட்டார். அவருக்குப் பதில் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர் படக்குழுவினர். இந்தப் படத்தின் ஆரம்பமே பெரும் சிக்கலாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாகக் கூறப்பட்ட படம் இது. அப்போது படத்துக்கு இயக்குநர் செல்வராகவன்.

திடீரென்று கமலுடன் அவருக்கு உரசல் ஏற்பட்டுவிட, படத்திலிருந்தே அவர் விலகிக் கொண்டார்.

இப்போது கமல்ஹாஸனே இயக்குவதாக அறிவித்தார் தயாரிப்பாளர். ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் இதுவரை படம் துவங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த தாமதத்தைப் பார்த்து வெறுத்துப் போன படத்தின் நாயகி சோனாக்ஷி சின்ஹா, படத்திலிருந்தே விலகிக் கொண்டார். இந்தத் தாமதத்தால் சஞ்சய் லீலா பன்சாலி படத்துக்கு தான் கொடுத்த கால்ஷீட் பாதிக்கும் சூழல் உள்ளதால், இனி படத்தில் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க மிக ஆர்வம் காட்டினார் சோனாக்ஷி. கமல் வயதில் பாதிகூட இல்லையே, அவருடன் எப்படி ஜோடி சேர்வீர்கள் என்று கேட்டபோது, காமிரா முன்னால் நின்றபிறகு நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை என்றார்.

ஆனால் தொடர்ச்சியான தாமதம் அவரது உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது.இந்தியில் இன்றைய தேதிக்கு பரபரப்பான நடிகை சோனாக்ஷிதான். எப்போது துவங்கும் என்றே தெரியாத படத்தில் மாட்டிக் கொண்டு நல்ல இந்தி வாய்ப்புகளை இழப்பதா என்ற நினைப்பில் அவர் கழன்று கொண்டார்.

இப்போது புதிய நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம்!

0 comments:

Post a Comment