Thursday, June 30, 2011

மீண்டும் மணல் கயிறு - எஸ்வி சேகர்

தனது பிரபல 'மணல் கயிறு' படத்தின் இரண்டாம் பாகத்தை, மகன் அஸ்வினை வைத்து எடுக்கப் போவதாக நடிகர் எஸ் வி சேகர் கூறினார்.

விசு எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படம் மணல் கயிறு. 1982-ல் வெளியான இந்தப் படம் விசுவின் வசனங்கள் மற்றும் எஸ்வி சேகர், கிஷ்மூ, மனோரமா போன்றவர்களின் நடிப்புக்காக பெரிதும் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் விசுவுக்கென்று ஒரு இடத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக எஸ்வி சேகர் நீண்ட நாட்களாகக் கூறி வந்தார்.

இப்போது இதுபற்றி அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் சேகரின் மகன் அஸ்வினுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதையொட்டி சமீபத்தில் ஈரோடு கூடுதுறைக்கு மகன் மற்றும் வருங்கால மருமகளுடன் வந்த அவர் நிருபர்களிடும் கூறுகையில், "அஸ்வின் நடித்துள்ள இரண்டாவது படம், 'நினைவில் நின்றாய்' விரைவில் வெளிவருகிறது. இந்தப் படம் வெற்றி பெறவும், அஸ்வின் - ஸ்ருதி திருமணம் சிறப்பாக நடைபெறவும் பவானி கூடுதுறைக்கு வந்து வழிபட்டேன்.

நினைவில் நின்றாய் திரைப்படம் வித்தியாசமான கதை. கருணைக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில், ஒரு இடத்தில்கூட தணிக்கைக் குழுவினர் காட்சிகளைத் துண்டிக்கவில்லை.

'மணல் கயிறு' இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. 1982 ல் இப் படத்தில் நடித்த விசு உள்பட அனைவரும் நடிக்கின்றனர்," என்றார்.

மணல் கயிறு ஒரிஜினல் படத்தில் நடித்த விசுவின் தம்பியும் படத்தின் இணை இயக்குநருமான கிஷ்மூ இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.Topics: s ve shekher, manal kayiru, visu, மணல் கயிறு, எஸ்வி சேகர், அஸ்வின்

0 comments:

Post a Comment