July 1, 2011 | no commentsஏற்கனவே டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், லாரி உரி்மையாளர்கள் ஸ்டிரைக்கில் குதிக்கத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டது அரசு.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 15 பைசாவும் உயர்த்தியுள்ளது அரசு. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வருகிறதாம். பெட்ரோல் பங்க் டீலர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வேண்டியதாகப் போய் விட்டதாக அரசு காரணம் கூறியுள்ளது.பெட்ரோல் பங்க்குளுக்கு, பெட்ரோலுக்காக தரப்படும் டீலர் கமிஷன் தொகையை கிலோ லிட்டருக்கு ரூ. 1218 என்பதிலிருந்து ரூ. 1499 ஆக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல டீசலுக்கான டீலர் கமிஷன் தொகையை ரூ. 747 என்பதிலிருந்து ரூ. 912 ஆக உயர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் விலையில் கையை வைத்து மக்கள் தலையில் கையை வைக்க வைத்து விட்டனர்.சில தினங்களுக்கு முன்புதான் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியது அரசு. இந்த நிலையில் மீண்டும் டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் லாரிகள் ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment