விஸ்வரூபத்தில் சோனாக்ஷி இல்லை என்றாகிவிட்டதால், அவருக்குப் பதில் அதே அந்தஸ்துள்ள நடிகைக்கு வலைவீசி வருகிறார்கள்.
சோனாக்ஷிக்கு பதில் இப்போது 'இயக்குநர் கமல்ஹாஸன்' தேதி கேட்டிருப்பது தீபிகா படுகோனேவிடம் என்று கூறப்படுகிறது.
தீபிகா ஏற்கெனவே இந்தியாவின் காஸ்ட்லி படங்களுள் ஒன்றான ரஜினியின் ராணாவில் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியுடம் உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகி வரும் சூழலில், கமல் பட வாய்ப்பும் வந்திருப்பது தீபிகாவை திகைக்க வைத்துள்ளது.
'கமல் வாய்ப்பை ஏற்றால் கைவசம் உள்ள இந்திப் படங்களை இழக்க வேண்டி வரும். ஆனால் ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் சிகரங்களோடு நடிக்கும் வாய்ப்பையும் இழக்க மனமில்லை, என்ன செய்யலாம்?' என யோசித்து வருகிறாராம் தீபிகா.
ராணா படத்துக்கு முதலில் தேர்வானவர் சோனாக்ஷி. ஆனால் நண்பரின் மகள் என்பதால் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி. அதன்பிறகுதான் தீபிகா வந்தார்.
விஸ்வரூபத்தில் முதலில் ஒப்பந்தம் போட்ட சோனாக்ஷி இப்போது விலகிவிட்டதால், இந்த வாய்ப்பும் தீபிகாவுக்கு வந்திருக்கிறது. ஏற்பாரா?Topics: விஸ்வரூபம், கமல்ஹாஸன், தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, sonakshi sinha, kamal, deepika padukone, vishwaroopam
0 comments:
Post a Comment