Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 16:34 [IST] --> A A A வேங்கை | தமன்னா .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}தனுஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு வேங்கை என்ற தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
நடிகர் தனுஷ், தமன்னா ஜோடியாக நடித்த வேங்கை என்ற பெயரில் புதுப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். வேங்கை பெயரில் ஏற்கனவே படம் எடுத்து வருவதாகவும் தனுஷ் படத்தில் அப்பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கலைச் செல்வம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் சார்பில் வக்கீல் ராஜசேகரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம சுப்பிரமணியம் தனுஷ் படத்தில் வேங்கை பெயரை பயன்படுத்த ஒரு வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்த விவகாரம், வேங்கை படத்தை துவங்கும் போதே பிரச்சினையாக வெடித்தது. அப்போது, 'போட்டி வேங்கை'யை பணம் கொடுத்து சமாளித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறினர். ஆனால் இப்போது தனுஷ் படம் வெளியாகும் நேரம் என்பதால் மீண்டும் தலைப்பு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.Topics: தனுஷ், வேங்கை, தடை, ஹரி, danush, vengai, ban, venghai
0 comments:
Post a Comment