Connect withFollow @thatsTamil
சனிக்கிழமை, ஜூன் 25, 2011, 11:42 [IST] --> A A A '180' படக்குழு ரத்ததானம் | 180 படங்கள் | 180 இசை வெளியீடு .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}'180'... படத்தின் தலைப்பைப் போலவே இந்த படக் குழுவினரின் செயலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
பொதுவாக ஒரு படம் முடிந்ததும், அந்த யூனிட் ஆட்கள் பூசணிக்காய் உடைப்பது தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.
ஆனால் '180' படக்குழுவினர் பூசணிக்காய் உடைக்கவில்லை. அதற்கு பதில், படத்தின் வெளியீட்டு தினமான இன்று, படக் குழுவினர் ரத்த தானம் செய்தனர்.
சத்யம் சினிமாஸ் - அகல் பிலிம்ஸ் தயாரித்து, ஜெயேந்திரா இயக்கியுள்ள படம் நூற்றெண்பது. இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.
இதையொட்டி, 'நூற்றெண்பது' படக்குழுவினர் நேற்று ரத்த தானம் செய்தனர். இயக்குநர் ஜெயேந்திராவும், படத்தின் ஹீரோயின் ப்ரியா ஆனந்தும் ரத்ததானம் செய்தார்.
படத்தின் எழுத்தாளர்கள் சுபா, நடிகர் ஸ்ரீசரண், நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
சென்னை ரோட்டரி, டிடிகே ரத்த வங்கியுடன் இணைந்து, 180 படக்குழுவினர் சத்யம் தியேட்டர் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.Topics: tamil cinema, blood donation, 180 movie, jayendra, சத்யம் சினிமா, ரத்த தானம்
0 comments:
Post a Comment