மும்பை: ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ஹீரோயின் படத்தில் அவரை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளது யுடிவி நிறுவனம்.
ஐஸ்வர்யா ராய், அர்ஜுன் ராம்பலை வைத்து ஹீரோயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுர் பண்டார்கர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டில்களும் வெளியாகின.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவரை ஒப்பந்தம் செய்த போது, இதுகுறித்து எதுவும் பண்டார்கருக்கு தெரியாது என்பதால், இப்போது படத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனை படத்தின் தயாரிப்பாளரான யுடிவி மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரிது. எனவே அவர் நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவருடன் இப்போது பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இருந்தாலும் இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்துவது என நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கு பதில் நாங்கள் நடிக்கிறோம் என பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கால்ஷீட் தர முன்வந்துள்ளனராம். அவர்களில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் யாரையும் இப்போதைக்கு கமிட் செய்வதாக இல்லை என்று அறிவித்துள்ளது யுடிவி.Topics: ஐஸ்வர்யா ராய், ஹீரோயின், பிரியங்கா சோப்ரா, மதுர் பண்டார்கர், priyanka chopra, heroine, madhur bhandarkar, aishwarya rai
0 comments:
Post a Comment