முருகதாஸுக்கு காத்திருக்கு ஹிந்தி டாப் ஹீரோக்கள் June 28, 2011 | no comments
ஹிந்தி “கஜினி” யின் மாபெரும் வெற்றிக்குப் பின் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. “கஜினி” க்குப் பின் ஷாரூக்கானை அவர் இயக்குவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், “ரா ஒன்” படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ஷாரூக்கான். அந்த இடைவெளியில் தமிழில் “ஏழாம் அறிவு” படத்தை தொடங்கி விட்டார் முருகதாஸ்.இதற்கிடையே அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோரை விட சல்மான்கானின் மார்கெட் பாலிவுட்டில் உச்சம் தொட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் முருகதாஸ் – சல்மான்கான் இணையும் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளார்கள். அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலர் முயற்ச்சிக்கிறார்கள். இதையடுத்து ‘சிங்கம்’ ரீமேக்கில் நடித்து வரும் அஜய் தேவகனும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் யாரை இயக்குவது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்கிறது முருகதாஸ் தரப்பு.
0 comments:
Post a Comment