Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 15:05 [IST] --> A A A .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவர் மனைவி லதா ரஜினி மட்டும் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் தங்கியிருந்தனர். ரஜினி தனது வழக்கமான உடல்நிலைக்குத் திரும்பிவிட்டார். படம் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, எளிய உடற்பயிற்சிகள், தியானம் என ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட வீடு புதுப்பிப்பு வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை கவனிக்கவும், வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் லதா ரஜினி நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை திரும்பினார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் ரஜினியின் உடல்நலம் குறித்து அவரிடம் அக்கறையாக விசாரித்தனர்.
லதா அவர்களுக்கு பதில் அளிக்கையில், "ரஜினி நலமுடன் உள்ளார். சிங்கப்பூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் விரைவில் சென்னை திரும்புவார். உங்கள் அன்புக்கு நன்றி," என்றார்.Topics: rajini, latha rajini, singapore, rajini health, ரஜினி, ரஜினி உடல்நிலை, லதா ரஜினி, சிங்கப்பூர்
0 comments:
Post a Comment