June 29, 2011 | no commentsஎதிர்கட்சிகள் தன்னை திறமையற்றவன் என்று கூறிவந்ததற்கு இன்று நடைபெற்ற பத்திரிக்கை ஆசிரியர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். இந்த சந்திப்பில் 5 பத்திரிக்கையாசிரியர்கள் மட்டும் பங்கேற்றனர்.
சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, நான் திறமையற்றவன் என்று எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் நான் திறமையற்றவன் அல்ல. காங்கிரஸ் கட்சியை சோனியா நன்றாக வழிநடத்தி வருகின்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த பணிகள் நடந்து வருகிறது. இந்த மாற்றம் விரைவில் வெளியாகும். ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும், சிக்கலும் இல்லை.லோக்பால் அமைப்பில் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதுதான் எனது விருப்பமும் கூட. அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் அதே சமயம் நல்ல வலுவான மசோதவாக இருக்க வேண்டும் என்றார்.மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங். இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிகை ஆசிரியர்களிடமும், கடந்த பிப்ரவரி மாதம் “டிவி’ சேனல் ஆசிரியர்களிடமும், பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment