Wednesday, June 29, 2011

இரண்டாவது டெஸ்ட்- விக்கெட் மழை

June 29, 2011 | no commentsஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக லட்சுமண் 85 ரன்னும் ரெய்னா 53 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பால், ‌எட்வர்ட்ஸ் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.‌அடுத்து விளையாடிய ‌ வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன் எடுத்திருந்தது.முன்னதாக பார்படாஸ் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் “வேகங்கள் போட்டுத் தாக்க, இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. உணவு இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும்எடுத்திருந்தது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி பார்படாசில் நேற்று துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் நாஷ் நீக்கப்பட்டு, மர்லான் சாமுவேல்ஸ் வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதில் அபிமன்யு மிதுன் இடம் பெற்றார். “டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, “பீல்டிங் தேர்வு செய்தார்.ராம்பால் மிரட்டல்:இந்திய அணிக்கு துவக்கத்திலேயே “அடி விழுந்தது. ராம்பால் வேகத்தில் முகுந்த்(1) நடையை கட்டினார். தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிட்(5), சமி பந்தில் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. தொடர்ந்து மிரட்டிய ராம்பால், தனது ஒரே ஓவரில் முரளி விஜய்(11), விராத் கோஹ்லியை(0) வெளியேற்றி இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். இப்படி “டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர உணவு இடைவேளையின் போது 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. போராடிய லட்சுமண்(23) அவுட்டாகாமல் இருந்தார்.உணவு இடை‌வேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடிய லட்சுமண் 85 ரன்‌ சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவும் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் 68 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.பின்னர் முதல் இன்னிங்சைதொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் வரிசை ஆட்டக்காரர்களான சிம்மன்ஸ்(2), அட்ரியன்(3) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததனர்.பிராவோ 9 ரன்னுக்கு ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன் எடுத்திருந்தது. சர்வான் 10 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

0 comments:

Post a Comment