Wednesday, June 29, 2011

ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்

மும்பை: எங்களுக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகான பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தந்தையாகவிருக்கும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கடந்த வாரம் அமிதாப் பச்சன் அறிவித்தார். மேலும் தனக்குப் பேரன்தான் பிறப்பான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போ அபிஷேக்கோ தனக்கு ஐஸ்வர்யா மாதிரியே அழகான பெண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் தந்தையாகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தான் கர்ப்பமாக இருப்பதை எனது தந்தை தான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தான் கூறினார்.

என்னுடைய தாய் ஜெயா பச்சன் கர்ப்பம் தரித்தபோது எனது தந்தை அவரது தந்தையைத் தான் அந்த செய்தியை உலகிற்கு தெரிவிக்க சொன்னார். இதை நான் என் மனைவியிடம் எப்பொழுதோ கூறியிருந்தேன். அதை நினைவில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா விருப்பப்படியே அந்த செய்தியை எனது தந்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. தொலைபேசி ஓயாது ஒலிக்கிறது. எங்கள் வீடு முழுவதும் மலர்கொத்துகளாகக் காட்சியளிக்கிறது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஐஸ்வர்யாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எந்த புத்தகங்களையும் இன்னும் படிக்கவில்லை.

புதிய படங்கள் திரைக்கு வந்தவுடன் தான் இதில் முழுக் கவனம் செலுத்துவேன். நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை ஜஸ்வர்யா போன்று அழகான பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

அமிதாப் பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார், அபியோ பெண் வேண்டும் என்கிறார். யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.Topics: aishwarya rai, abhishek bachchan, pregnant, baby girl, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கர்ப்பம்

0 comments:

Post a Comment