June 29, 2011 | no commentsபுதிய இணைப்புகளுக்கு தரப்படும் கமிஷன் தொகை குறைக்கப்பட்டதைக் கண்டித்து மொபைல் போன் விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு நடத்துகின்றன.
ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கமிஷன் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இதனால் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் செல்போன் நிறுவன முகவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்.இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது”, என்று அறிவித்துள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விற்பனை இழப்பு ஏற்படும்.
0 comments:
Post a Comment