Wednesday, June 29, 2011

மோதத் தயாராகும் பாரதிராஜா vs அமீர், சேரன்

June 29, 2011 | no comments

சங்க தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் வெற்றி பெற்ற ஒருவர் கூட சங்க அலுவலகத்திற்கு வருவதில்லையாம். மறைந்த இயக்குனர் புதியவனின் மனைவிதான் ஊழியராக பணியாற்றி வந்தார். இப்போது அவரும் வருவதை நிறுத்திவிட்டதால் சங்கம் எப்போது திறந்திருக்கும், எப்போது பூட்டப்பட்டிருக்கும் என்பதே புரியாமல் தவிக்கிறார்களாம் உறுப்பினர்கள்.

டைரக்டர் யூனியனுக்கு எப்போ வருவீங்க என்று அமீருக்கும், சேரனுக்கும் போன் அடித்த உதவி இயக்குனர் ஒருவருக்கு அதே போனிலேயே அர்ச்சனை! இருவரும் கேட்ட ஒரே கேள்வி, இந்த நம்பர் எப்படி கிடைச்சுது உனக்கு?

யாருமே பதவியேற்றுக் கொள்ளாமலிருப்பதால் தமக்கான பிரச்சனையை யாரிடம் சொல்வது என்று திகைத்துப் போயிருக்கிறார்கள் உறுப்பினர்கள். வேறு வழியில்லாமல் பழைய செயலாளர் செல்வமணிக்கே போன் அடித்து புலம்புகிறார்களாம். இதற்கிடையில் தனியாக போட்டியிட்டு வென்ற சங்கத்தின் இணை செயலாளர் வேல்முருகன் பதவியேற்பு விழாவை சீக்கிரம் நடத்தவில்லை என்றால் சங்கத்தின் உள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த வாரம் வரப்போகும் ஆனந்த விகடனில் அமீரையும் சேரனையும் உண்டு இல்லை என்று காய்ச்சியிருக்கிறாராம் இயக்குனர் சங்க தலைவராக வெற்றி பெற்றிருக்கும் பாரதிராஜா. அவர்களும் பதிலுக்கு பேசினால் சங்கத்தில் பிளவு நிச்சயம் என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது இயக்குனர்கள் ஏரியா!

0 comments:

Post a Comment