Wednesday, June 29, 2011

குத்தாட்டம் போட வரும் பாக் கிரிக்கெட் வீரரின் காதலி

June 29, 2011 | no comments

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக். இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment