Wednesday, June 29, 2011

ஆடிக்காற்றில் பறந்து போன அரவாண் செட்

June 29, 2011 | no comments

வசந்தபாலன் இயக்கி வரும் அரவாண் படத்தின் ஷூட்டிங்கில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த முறை படப்பிடிப்புக்காக போடப்பட்ட குடிசை செட் அப்படியே காற்றில் பறந்துவிட்டதாம்.

மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்…

0 comments:

Post a Comment