This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, August 28, 2011

கலை... தாகம்.. தொழில் அதிபர்...அசின்

நடிகை அசின் தீராத கலைத்தாகத்தால் தான் திரையுலகிற்கு வந்தார் என்று கூறப்படுகிறது.

கேரளாவில் நடிகை அசினுக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளன. அம்மணி அதை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளார். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத்தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம்.

ஆரம்பத்தில் கோலிவுட்டிலும், பின்னர், தெலுங்கிலும் பிரமாதப்படுத்திய அசின் தற்போது பாலிவுட்டிலும் தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எப்பாடுபட்டாவது பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில் குறியாய் உள்ளார். இதனால் கோலிவுட், தெலுங்கில் வரும் வாய்ப்புகளைப் புறம் தள்ளி வருகிறார்.

கஜினி தன்னை உயரத்தில் உட்கார வைத்ததைத் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கும் அசினுக்கு, கஜினிக்குப் பிறகு அதேபோல ஒரு சூப்பர் டூப்பர் படம் அமையாதது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறதாம்.இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

எப்படியோ 'தாகம்' தீர்ந்தா சரிதான்...!

கோலிவுட்டுக்கு நோ சொன்ன ஷ்ரேயா கோஷல்

நடிக்க ஆரம்பித்தால் பாட முடியாமல் போய்விடும் என்பதால் நடிக்க வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

பாடகிகளில் இனிமையான குரலை உடையவர் ஷ்ரேயா கோஷல். இனிமையான குரல் மட்டுமல்லாமல் அசரடிக்கும் அழகையும் கொண்டவர் இந்த 27 வயது பாட்டுக் குயில்.வசீகரமான முகம் கொண்ட இவரையும் நடிக்க வைத்து விட கோலிவுட்டில் தீவிரமாக முயற்சிக்கிறார்களாம் சிலர். எப்படியாவது கோஷலை நடிகையாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனராம்.

நினைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க ஷ்ரேயாவை அணுகினர். எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் ஸ்ரேயாவோ நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஏன் ஸ்ரேயா இப்படி அடம்பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன் என்றார்.

பரவாயில்லையே, தனது பாதையில் படு தெளிவாகத்தான் இருக்கிறார் ஷ்ரேயா.

நிறைய தெலுங்குப் படம் பார்... அமலா பாலுக்கு அனுஷ்கா அட்வைஸ்

நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா என்று நடிகை அமலா பாலுக்கு அனுஷ்கா அறிவுரை வழங்கியுள்ளாராம்.

கேரள அழகி அமலா பால் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அன்மையில் வெளிவந்த தெய்வத்திருமகள் பற்றி பெருமையாய் பேசி வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டை பார்த்தாச்சு, டோலிவுட்டை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கிறார் அமலா பால்.

அதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறாராம். இது பற்றி தெரிய வந்த அனுஷ்கா நிறைய தெலுங்கு படங்கள் பார் அமலா. அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம். அமலாவும் தெலுங்குப் படங்களைப் பார்க்கத் துவங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அட அனுஷ்கா அமலாவுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகியாச்சா என்றால் ஆம் என்று தான் கூற வேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததில் இருந்தே தோழிகளாகி விட்டனர். ஸாரி.. நெருக்கமான தோழிகளாகிவிட்டனராம்.

'சீயானுக்கும்' கூட அமலா பால் நெருங்கிய தோழியாகி விட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்...!

Saturday, August 27, 2011

சல்மான்கானுக்கு முக நரம்பில் பாதிப்பு- சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

மும்பை: இந்தி நடிகர் சல்மான் தனது தாடை நரம்பு சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் தாடையில் கடும் வலி இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியிடாமல் இருந்த சல்மான் கான் சமீபத்தில் அதுகுறித்து ஒரு வெளியில் சொன்னார்.

இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவும் முடிவு செய்துள்ளார். தாடையில் ஏற்படும் கடும் வலியினால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டதாகவும், சமீபகாலமாக அந்த வலி அதிகரித்து விட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக மும்பையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

யுவன் யுவதி - சினிமா விமர்சனம்

ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

லோக்பால் மசோதா கோரி கடந்த ஏப்ரல் மாதம் முதல்முறையாக அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தபோது தென்னகத்திலிருந்து அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய், சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பி வந்த ரஜினி, இந்த முறை வலுவான லோக்பால் கோரி ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார். அன்னா ஹஸாரே மூலம் ரத்தமற்ற புரட்சி நாட்டில் உருவாகியுள்ளதாகவும், ஊழலை ஒழித்தே தீர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்களும் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

முதல் உண்ணாவிரதம் சோளிங்கர் நகரில் ஆரம்பித்துள்ளது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடந்து வருகிறது.

ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பொது மக்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சேளிங்கர் ரவி கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த் தனது படங்களில் தொடர்ந்து லஞ்சம், ஊழல் ஆகியவை எதிர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் லஞ்சம் லாவண்யத்தால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறினார். சொல்வது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் எப்போதும் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் அவர்.

ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய ஜன் லோக்பால் சட்டமசோதவை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்த 24 மணி நேரத்தில் நாங்கள் உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளோம்.

எங்களுடன் 200 பேர் ரசிகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்," என்றார்.

நடிகை மினிஷா லம்பாவிற்கு 2 முறை கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்

பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பாவிற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தி ந்டிகை மினிஷா லம்பா யான், கிட்னாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கவர்ச்சியான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம். மினிஷா, நியூயார்க்கில் நடக்கும் விழா கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் மினிஷாவின் மொபைல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், நியுயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது. மீறி கலந்து கொண்டால், கொலை செய்துவிடுவேன், என மிரட்டியுள்ளார். முதலில் வெளிநாட்டில் இருந்தும், பின்னர் இந்தியா நம்பர் ஒன்றில் இருந்தும் அழைப்பு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.

Monday, August 22, 2011

தலைவர் வீடு சிங்கள படைகளினால் உடைப்பு எம்.கே.சிவாஜிலிங்கம் செவ்வி .(VIdeo in)

2 ஆம் இணைப்பு .வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை கனராக வாகனகங்களை கொண்டு இடிக்கும் பணிகள் தற்போது (இரவு நேரத்தில்) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் பாரிய இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டை மட்டும்தான் இவர்களால்அகற்ற முடிமே தவிர மண்ணை அகற்ற இவர்களால் இடிக்கமுடியது எம். கே. சிவாஜிலிங்கம் செவ்வி கிழே.

இது தொடர்பான முன்னைய செய்தி

இராணுவத்தளபதியின் மனைவியின் அராஜகம்: படையினர் குளப்பம்

சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய

சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார்.

உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன் (இங்கே வாடா) என அதிகார மமதையில் தரக்குறைவாகப் பேசுகிறார் எனவும் படைதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தான் ஏதாவது படை முகாமுக்குச் சென்றால் தனக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்கிறார். அத்துடன சேவா வனிதா பிரிவினால் நடத்தப்படும் பாலர் வகுப்புகளில் கல்வி பயிலும் இராணுவச் சிப்பாய்களின் பிள்ளைகளிடமிருந்து ஒரு தவணைக்கு என கட்டணமாகத் தலா 600 ரூபா அறவிடுகிறார் எனவும் திருமதி ஜயசூரிய மீது படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செற்பாட்டுத் தகவல்கள் இலங்கையிடமாம்

பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி,ஸ்பெய்ன்,  அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்ததின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதியான அரசியல் தீர்வே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : மன்னார் ஆயர்

இலங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன்னாரில் சனிக்கிழமை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக ஆயர் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்துக்குப் பூசைக்காக சென்றிருந்த போது, கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அருட் தந்தை ஜிம் பிரவுணும் சக ஊழியரும் காணாமல் போனார்கள்.

அவரது நிலைமையைக் கண்டறிவதற்காக யாழ் ஆயர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை. அவர் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிவதில் அதிகாரிகளிடத்தில் தொடர்ச்சியாக அசமந்தப் போக்கே காணப்பட்டு வந்ததாகவும் மன்னார் ஆயர் தெரிவித்தார்.

ஆண்டகை அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி,மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த போர்க் காலத்தில், காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலும் இதுதான் நிலைமை.

ஐநா குழுவோ அல்லது வேறு எந்த தரப்போ யுத்த காலத்து சம்பவங்கள் பற்றி சுட்டிக்காட்டும் விடயங்களில் என்ன உண்மை இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதிகாரிகள் முயற்சிக்காமல் அவற்றை பொதுவாக நிராகரித்துவிடும் போக்கு கூடாது.

முன்னைய ஆணைக்குழுக்களால் எவ்வித பிரயோசனமும் கிடைத்திராத நிலையில், தற்போதைய நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளும் அவ்விதம் பலனளிக்காது போய்விடக்கூடாது.

கற்றறிந்த பாடங்கள் பற்றி ஆராயும் ஆணைக்குழு மூலம் நன்மை கிட்டும் என்ற நம்பிக்கையுடனேயே அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். நாட்டை ஆள்பவர்களிடத்தில் மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களின் கவனம் மக்கள் பக்கம் திரும்பினால் மட்டுமே உண்மையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்” என்றார்

Sunday, August 21, 2011

இந்திய உளவுத்துறையின் வலையில் சிக்குமா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் .

இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் வருகின்ற மாதம்  30 ஆம்  திகதி ஒரு மாநாட்டை  ஏற்பாடு செய்துள்ளனர் இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று  இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் அறிவித்துள்ளனர் . ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமைமைய உறுபினர்களை கேட்ட பொழுது  எமக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்த  தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக  அறிவித்து விட்டனர் .

தற்போது புலத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதிகளை  தொடர்புகொண்டு நாம் நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தான் நடத்துகின்றோம்  நீங்கள்  கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதே நபர் கனடாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதி நிதியை தொடர்பு கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்திக்கு பொறுப்பாக இருக்கும் சரஸ்வதி அம்மா ஒரு தெலுங்கர்அவரை மாற்றவேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துபவர்கள் யார் இவர்களின் குறிக்கோள் என்ன என்பதை பற்றி கிழே உள்ள செய்தி தொகுப்பில் இணைத்துள்ளோம் .  இவர்கள் நடத்தும்  மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பு இல்லை என்று உடனடியாக மறுப்பு அறிக்கை விடுபம்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நாம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .

கொழும்பு அரசத்தலைவர் மகிந்தா கைகளுக்கு வந்த பின்பு, எல்லாவற்றிலும்  தமிழருக்கு எதிரான “சதி” என்பது நாளொரு வண்ணமும் அரங்கேறி வருகிறது. அதில் ” டக்லஸ்  தேவானந்தாவை” மெல்ல,மெல்ல தனது வலைக்குள் இழுத்து, கடைசியில் “தேவானந்தா” தனது ஈ.பி.டி.பி சின்னத்தில் கூட நிற்கவிடாமல்,, ராஜபக்சேவின் “வெற்றிலை” சின்னத்தில் நிற்கவைத்த “தந்திரம்” மகிந்தாவின் வெற்றியாக  சிங்களவெறியர்களால் கருதப்படுகிறது. “துரோகி கருணாவை” முழுமையாக தனது கட்சியுடன் இணையவைத்ததில் மஹிந்தாவென்றதாக அதே சிங்கள இன வெறியர்கள் கூறிவருகிறார்கள்.புலிகளை  “நாகப்பாம்பு” என்றும் அதை அழித்து விட்டதாகவும், இனி “சாரைப்பம்புகளை” அழித்திவிடலாம் என்றும் சிங்கள வெறியர்களான மகிந்தா கும்பல் கூறிவருகிறது. அவர்களது அடுத்த “களம்” இந்தியாவிற்குள் இருக்கும் ” ராஜபக்சே எதிர்ப்பாளர்களை” அழிப்பதுதான் என்றும் கூறுகிறார்கள். அதற்கு தங்களுக்கு இந்திய அரசின் “உளவுத் துறையினர்” முழுமையாக் உதவி வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அப்படி இந்தியாவில் “சதி வேலைகளை” செய்ய  சில “தமிழ்நாட்டு ஆட்களை” இந்திய நடுவண் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த “தமிழ்நாட்டு ஆட்கள்” பட்டியல் இப்போது கிடைத்துள்ளது. அவர்களில் முதன்மையாக “நகைமுகன்” வருகிறார். அவர் முதலில் ” நடுவண் அரசின் அதிகாரி”யாக இருந்தார். அதை ராசினாமா செய்துவிட்டு, சாராய உடையார் என்று புகழ் பெற்ற ராமசாமி உடையார் நடத்திய நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். அப்போது ” நமது நிருபர்” என்ற வார ஏட்டை, “நெப்போலியன் பால்ராஜ்” என்பவர் நடத்தி வந்தார். அது 1989  ஆம் ஆண்டு. அந்த இதழில் “நகை முகன்” நண்பராக இருந்துவந்தார். அவ்வப்போது எழுதியும் வந்தார். அப்போது திமுக அரசு கருணாநிதி தலைமையில் நடந்து வந்தது. அந்த அரசை கலைக்க நாடவன் அரசில் இருந்த காங்கிரஸ் நினைத்தது. நெப்போலியன் பால்ராஜ் வசம் ” அசாம் மாநில” போராளிகள் என்று சிலர் வந்து தங்கி இருந்தனர். அவர்களை “உல்பா” தீவிரவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள். அந்த “உல்பா” தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது திமுக அரசு என்று ” பெரிய எழுத்துகளில் ” தங்களது இதழில் “நகைமுகன்” அச்சடித்து வெளியிட்டார். அதைவைத்து திமுக அரசை “கலைக்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அதேபோல நடுவன் அரசு கருணாநிதி அரசை கலைத்தது. கருணாநிதி அப்போது” நகைமுகனை” அடையாளம் கண்டு அவர் “ஐ.பி. ஒற்றர்” என்று அறிவித்தார். அதாவது நாடவன் அரசு நடத்தும் உளவு நிறுவனத்துக்கு “ஐ.பி.” என்று பெயர். அதன் விளக்கம் ” உளவுத் துறை” என்பதே.அப்போதிலிருந்து “நகைமுகன்” ஐ.பி. காரர்களுக்கு விசுவாசமாக இருந்து கொண்டே பல “கட்டை பஞ்சாயத்துகளை  செய்து வந்தார்.

1991 இல் ராஜிவ்காந்தி கொலைக்கு பிறகு,பலரும் தமிழ்நாட்டில் குற்றம் சாட்டப்பட்ட போது, திராவிடர் கழகத்தில் அப்போது இருந்த “பாலகுரு” என்பவரும் “ஜெயின் ஆணையம்” கொடுத்த அறிக்கையில் அவரது பெயர் இருந்ததை வைத்து, நாடவன் அரசின் உளவுத் துறையினர் கொடுத்த அழுத்தத்தில் அவர்களுக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவர் “பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்ததும், அதில் ஒரு தொண்டர் கொலை செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டதும், அங்கிருந்து வெளியேறினார் என்பதும்” தனிக் கதை. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் ஒரு ‘போர் நிறுத்தம்” புலிகளால் அறிவிக்கப்பட்டு இரண்டாண்டு கழித்து சிங்களத்தால் ஏற்கப்பட்டு கையெழுத்தான நிலையில், தமிழகத்தில் இருந்து பலரும் ஈழம் சென்று வந்தனர்.அப்படி சென்றதில் ஒருவர் “தமிழா, தமிழா பாண்டியன்” என்ற ஊடகக்காரர். இப்போது 2010 ஆம் ஆண்டு மகிந்தாவின் உளவுத்துறையும், இந்திய உளவுத் துறையும், ஒரு திட்டமிட்டது. அதில் “கருணா மூலம் சரணடைந்த கேணல் ராம் குழுவினரை” பயன்படுத்தி அவர்கள் அடுத்த “ஆயுதப் போராட்டத்திற்கு” தயார் செய்வதாக ஒரு “கட்டுக் கதையை” பரப்ப எண்ணினார்கள்.

அதற்காக இந்தியாவிலிருந்து சிலர் இலங்கை வரவேண்டும் என்றும், அவர்கள் “கேணல் ராம் குழுவினரை” சந்தித்ததாக பரப்புரை செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டனர். அதற்கு இந்திய உளுத் துறையினர், “பாலகுருவையும், தமிழா, தமிழா பாண்டியனையும், நகைமுகனையும்” அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்று வந்ததை ” ஹம்சாநண்பர்” ஜாபர் சேட் மூலம் “நக்கீரன்” இதழில் வெளியிட  வைத்தனர்.அதன்மூலம் “பிரபாகரன் இறந்துவிட்டார் எனவும், ராமு ஆயுதப்போராட்டத்தை நடத்துகிறார்” எனவும் ஒரு கருத்தை பரப்ப இரண்டு நாட்டு உளவுத் துறைகளும் திட்டமிட்டன. அதில் அவர்களுக்கு பல வகைகளில் பிளான் உண்டு என்றும் கூறினர். அடுத்து “பாலகுரு மூலம்” போர் நடக்கும் சூழலிலேயே ஒரு மாணவர் பேரவையை ஏற்படுத்தி அதன்மூலம் “தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னைக்கு” போராடும் அமைப்பாக தனைகளை காட்டிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது “இந்து மத வெறியர்களை” நம்பி மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னையை அகில இந்திய அளவில் எடுக்க முடியும் என்று பரப்பி அதன்மூலம், “முஸ்லிம்கள்” தமிழர்களுக்கு ஆதரவாக வருவதையும், “கிறித்துவர்கள்” தங்களையும்  தமிழர்களாக கருதி வருவதையும் உடைக்க இரண்டு அரசுகளும் “சதி” செய்வதாக தெரிகிறது.  சிங்களம் ஏற்கனவே தனது “சாதியின் மூலம்” தமிழ் பேசும் முஸ்லிம்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராக ” நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதால், அதையே இப்போது இந்தியாவில் பயன்படுத்த சொல்லி உலவுத்துறைகளுக்குள் பேசி, முடிவு செய்துளார்கள். அதுவே அங்கு இப்போது அமுலாகிவருகிறது. அதில் சமீபத்தில் பெங்களூரில் ஒரு மாநாட்டை கூட்டி அதில், கர்நாடக சிறிராம் சேனாவின் பிரமோத் முத்தாலிக் தலைமையில் செயல்பட முடிவு செய்துள்ளனர். இதுவும் உளவுத்துறைகளின் ஏற்பாடே. அதில் மேற்கண்ட ஒவ்வொரு நபர்களும் இறங்கி பணியாற்ற உளவுகள் பணித்துள்ளன.

தொடரும்-

Saturday, August 13, 2011

வெளியக தலையீடுகளற்ற சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

எந்தவொரு வெளியகத் தலையீடுகளும் இன்றி நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடமே சீனத் தலைவர்கள் இந்த வாக்குறுதியை அளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசிய சிறிலங்கா அதிபர், நேற்று சென்சென் நகரிலுள்ள விடுதி ஒன்றில் சீன அதிபர் ஹுஜின்டாவோவை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாகவும், பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தும், போருக்குப் பின்னர் சிறிலங்கா எதிர்கொள்ளும் வெளியக அழுத்தங்கள் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போதே வெளியக அழுத்தங்களின்றி நல்லிணக்க முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்வதற்கு சீனா ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு எதிராக சிறிலங்காவுக்கு கைகொடுக்க சீனா தயாராக இருப்பதையே இவ்வாறு சூசகமாக வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேவேளை நான்கு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 12, 2011

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிறிலங்காவை விட்டு வெளியேறி உள்ளார்

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே தான் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மின்னஞ்சல் மூலம் இந்தியாவின் இந்து நாளேட்டுக்கு கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை சட்டவாளர்கள் விடுவிக்கும் வரை அமெரிக்காவில் பணியாற்றப் போவதாகவும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

தான் நிச்சயம் யாழ்ப்பாணம் திரும்புவேன் என்றும் ஏனென்றால அது தனது சொந்த விடு என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேரதலில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைளை எடுத்து வந்த நிலையிலேயே அவர் சிறிலங்காவில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

சிறிலங்கா: போரின் பின் இரண்டாண்டுகள் கழிந்தாலும்..?

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் நடந்து முடிந்த யுத்த அழிவுகளை மீட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதாவது இந்த இடங்கள் தொடர்ந்தும் நரகமாகவே உள்ளன.

இவ்வாறு KRISHAN FRANCIS - Associated Press செய்தி நிறுவனத்திற்கு எழுதிய செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா தற்போது மீண்டும் உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக மாறியுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் நடந்து முடிந்த யுத்த அழிவுகளை மீட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதாவது இந்த இடங்கள் தொடர்ந்தும் நரகமாகவே உள்ளன.

இராணுவ ஆக்கிரமிப்பு, தமது அன்பிற்குரியவர்களை இழந்தமை என இந்த மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

சிங்களவர்களால் ஆளப்படுகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற குருதி தோய்ந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் விளைவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளதுடன், காணாமற் போன உறவுகளைக் கண்டுபிடித்து ஒன்று சேர்க்கும் எந்தவொரு முயற்சிகளும் இதுவரையில் எட்டப்படவில்லை.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப இன்னமும் அரசியல் அதிகாரப் பகிர்வு செயற்படுத்தப்படவில்லை.

"சிறிலங்கா அரசாங்கமானது எந்தவொரு விட்டுக்கொடுப்புக்களையோ அல்லது ஈடுபாட்டையோ காட்டவில்லை" என யூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருப்பது போன்ற தோற்றப்பாட்டை உலகிற்குக் காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகவும், அவர்களின் சிதறுண்ட வாழ்வை மீள ஒன்றுசேர்ப்பதற்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதாகவும் இதனால் தமிழ் மக்கள் பெரும் பயனுற்றுள்ளதாகவும் காட்டிக்கொள்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறை விடயத்தில் தனக்கென தனியிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வானூர்திநிலையங்கள், கப்பற்துறைமுகங்கள், புதிய வீதிகள் போன்றவற்றை அமைக்கும் பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் இராணுவத் தலைமையகம் ஒன்று உள்ள இடத்தை மிக ஆடம்பரமான கடற்கரை விடுதியாக அமைக்குமாறு ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளது.

ஆனால் வடபகுதியிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துள்ளது.

முறிகண்டியில் உள்ள தனது வீடானது இராணுவத்தினர் வசம் உள்ளதால் பாடசாலை நடைபெறும் காலப்பகுதியில், இரவுநேரங்களில் பாடசாலையில் படுத்துறங்குவதாக அதிபர் ஆசிர்வாதம் சூசைநாதர் தெரிவித்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் முறிகண்டியிலிருந்து 50 மைல்கள் தொலைவில் இருப்பதால் வார இறுதியில் மட்டுமே தனது குடும்பத்தவர்களிடம் செல்ல முடிவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

படையினரின் வசம் வீடுகள் உள்ளதால் இந்தப்பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறிடங்களில் வாழ்வதாகவும், விரைவில் இந்த மக்களின் வீடுகள் கையளிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான எந்தவொரு முயற்சிகளும் நடைபெறுவதாகத் தெரியவில்லை என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

"எனது வீட்டில் 106 தென்னை மரங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேங்காயை நான் பணம்கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனது வீட்டை ஒப்படைப்பதாக கடந்த இரு ஆண்டுகளாக இராணுவத்தினர் கூறிக்கொண்டேயுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் எனது வீட்டிலேயே வசித்த வருகின்றனர்" என 44 வயதான சூசைநாதர் தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

யுத்தம் உக்கிரம் பெறுவதற்கு முன்னர் விசுவலிங்கம் கோமதி என்பவர் கிளிநொச்சியிலிருந்த தனது வீட்டில் கோழி மற்றும் கால்நடைகளை வளர்த்து அதில் வருமானம் பெற்று வாழ்ந்தார்.

தற்போது புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்பதற்காகவும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகவும் தனது நகைகள் அனைத்தையும் அடைவு வைத்துள்ளதாகவும் 52 வயதான கோமதி தெரிவித்துள்ளார்.

"எமக்குச் சொந்தமான வீட்டை மட்டும் எம்மிடம் இராணுவத்தினர் கையளிக்க வேண்டும். அதை மட்டுமே நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம்" என கோமதி தெரிவித்துள்ளார்.

தமது வீடுகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் அவற்றில் வடக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள பெரும்பான்மைச் சிங்களவர்களை குடியேற்றிவிடுவார்களோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இவ்வாறான குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் வலுவைக் குறைத்து சிறுபான்மைத் தமிழர்களிடமிருந்து எதிர்காலத்தில் தனித்தாய்நாடு என்ற கோரிக்கையானது புதிதாக எழாமல் தடுக்க முடியும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் எண்ணப்பாடாகும்.

யுத்தத்தின் முன் தனியார்களுக்குச் சொந்தமாக இருந்த இடங்களை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளதாக தமிழ் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"நிரந்தரமாக இருக்கின்ற நோக்கிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இராணுவத்தினர் நிரந்தர முகாங்களை அமைக்கின்றனர். வடமாகாணத்தின் நிர்வாக அலுவல்களில் அதிகம் தலையீடு செய்கின்றனர்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மின்சார வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீதிகள் செப்பனிடப்படுகின்றன. சிறப்புச்சந்தைகள், வங்கிகள், இணையத்தளக் கடைகள் என்பன யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சூழத் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் யுத்தத்தின் போது தமது வீடுகளை இழந்த மக்கள் தொடர்ச்சியாக கூடாரங்களிலும், சிறிய குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் பெரும்பாலான மக்கள் யுத்தத்தின் போது தமது உடைமைகளையும், குடும்பத் தலைவர்களையும் இழந்து வாடுகின்றனர். இதனால் இந்த மக்களின் வாழ்வு பெரும் வறுமை நிலைக்குட்பட்டதாகவே உள்ளது.

மறுபுறம், இராணுவ முகாங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. போரின் போது கொல்லப்பட்ட இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்பட்ட துயிலுமில்லங்கள் முற்றமுழுதாக அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக கூடுகின்ற சிங்கள சுற்றுலாப் பயணிகளிற்காக சிறிலங்கா இராணுவத்தினர் உணவு விடுதிகளை அமைத்துள்ளனர்.

கடந்த மாதம் சிறிலங்காவின் வடபகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறானது, வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளிற்கான சாதகத்தைக் காட்டும் என சிறிலங்கா அரசாங்கம் நம்பியிருந்தது.

ஆனால் தற்போது ஆட்சியிலுள்ள கூட்டணியானது உள்ளராட்சி சபைத் தேர்தலின் போது வடக்கில் தோல்வியுற்றுள்ளது. 25 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் இத்தேர்தல் பெறுபேறானது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக உண்மையான மக்கள் ஆணையை எடுத்துக் காட்டியது.
இணக்கப்பாடு மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களில் அதிக கரிசனையைக் காட்டுவதாக சிறிலங்கா அரசாங்கம் அடித்துக்கூறுகின்றது.

"துரித மீள்குடியேற்றம், பொருளாதார நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றது. வெளிப்படையாகப் பல தேவைகள் நிறைவேற்றப்படுகிறது" என ராஜபக்சவின் ஆலோசகரும் கொள்கை வகுப்பாளருமான றஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் தனியார் நிலங்களை ஆளுகைப்படுத்தியுள்ளனர் என்பதை றஜீவ விஜேசிங்க மறுத்துள்ளதுடன், உண்மையில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தால் அதற்கான நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான ஆனந்தி யுத்தத்தின் போது காணாமற் போன தனது கணவரான சின்னத்துரை சசிதரன் என்பவரைத் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழ்ப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவரது கணவர் மே 18,2009 அன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

"தனது கணவர் சரணடையத் தயாராக இருக்கவில்லை. அவர் என்னை அனுப்பி விட்டு சயனைட் அருந்த முடிவெடுத்திருந்தார். ஆனால் நான் தான் அவரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் எஞ்சியுள்ள வாழ்வை எம்முடன் அவர் கழிக்க வேண்டும் என்பதால் அவரை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்" என ஆனந்தி உள்ளம் நெகிழ்கிறார்.

எழிலன் என நன்கறியப்படும் இவரது கணவர் மற்றும் சரணடைந்த ஏனைய புலி உறுப்பினர்களும் இவர்களது சரணடைவிற்கு மத்தியஸ்தம் வகித்திருந்த கத்தோலிக்க மதகுரு ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகத் தெரியாது என ஆனந்தி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியோரிடம் தான் தெரிவித்த போதிலும் இதுவரையில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என ஆனந்தி தெரிவித்தார்.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது தம்மிடம் சரணடைந்த 11000 முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களைத் தாம் மீளவும் அவர்களது குடும்பத்தவர்களுடன் இணைத்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சரணடைந்த தமிழ்ப் புலிகளில் பெரும்பாலானவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது கூடத் தமக்குத் தெரியவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

காணாமற் போன தமது உறவுகளை வைத்தியசாலைகள், முகாங்கள் மற்றும் தடுப்பு நிலையங்கள் போன்றவற்றில் தாம் தேடியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளால் பலவந்தமாகப் படையில் இணைக்கப்பட்ட தனது மகன் மற்றும் மகள் தொடர்பான செய்திகளை யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து தான் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை என 07 பிள்ளைகளின் தாயாரான சந்தனா முருகையா தெரிவித்துள்ளார். "யுத்தத்தின் போது அவர்கள் உயிர் தப்பினார்களா என்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது" என முருகையா தெரிவித்தார்.

உலகில் மிகப் பலம் வாய்ந்த அமைப்புக்களில் ஒன்றாக விளங்கிய தமிழ்ப் புலிகள், சிங்களப் பெரும்பான்மையினரால் ஆளப்படும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டபோது தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தனித்தாய்நாடு கோரிப் போராடிய புலிகள் அமைப்பானது சனநெருக்கடி மிக்க தொடருந்து நிலையங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதேவேளையில், சிறிலங்காப் படைகள் போர் வலயங்களில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிராயுதபாணிகளாக இருந்த தமிழ்க் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சிகள் பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் காண்பிக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தில் பங்குகொண்ட இருதரப்பினரும் பல போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடந்த ஏப்ரலில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அறிக்கையில் சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இக்குற்றச்சாட்டுக்களைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்ற போதிலும், மே 2009 இல் இடம்பெற்ற இறுதிப் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை முதல் முறையாக கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக் கொடூரமான யுத்தம் இடம்பெற்ற பின்னர் தற்போது இதயசுத்தியுடனான உள்ளார்ந்தமானதொரு மூலோபாயமானது உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்கத் தேவையாக உள்ளது என தேசிய சமாதானப் பேரவையின் ஆய்வாளாரான ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார். இராணவ ஆட்சி என்பது இதற்குப் பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பாக நீதியானதொரு முடிவு அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் அவர்களுக்கு என்ன நடந்ததென்பது தொடர்பாகவும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும. இது தொடர்பாக தமிழ்க் கொள்கை வகுப்பாளர்கள் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பான பதிலை இன்னமும் வழங்கவில்லை" என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Thursday, August 11, 2011

அமெரிக்கா மீது குற்றம்சாட்டுகிறது சிறிலங்கா

சிறிலங்கா அரசினால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இது தமக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துக்கு போதுமானளவு நிரூபித்து விட்டோம் என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு கேள்விக்கும் போதுமானளவு பதில் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ள அவர், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகப் பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் பலமுறை பதில் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வழங்கியுள்ள எச்சரிக்கையை அரசாங்கம் அற்பமானதாக கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல, அமெரிக்காவின் அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

சிறிலங்கா அரசானது நாட்டின் நலன் கருதி கடந்த காலங்களில் தான் விட்ட தவறுகளின் ஊடாகக் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தனது மனப்போக்கை மாற்றிக் கொள்வதுடன் சமூகத்திலிருந்து விலக்க முடியாத மதத் தலைவர்களின் ஈடுபாட்டையும் உள்ளடக்கி தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

'நாட்டில் நிலையான சமாதானத்தை நோக்கிய இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்காலத் தலைவர்களின் பங்களிப்புக்கள்' என்ற தலைப்பில் சிறிலங்காவில் உள்ள கரித்தாஸ் நிறுவனம் இணைந்த Sedec ல் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது ஆட்சியிலுள்ள மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதநல்லிணக்கவாதிகள், புத்தபிக்குகள், மதகுருக்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் அரசியல் தலைவர்களின் குறிக்கோள்கள், தமிழ் மக்களுக்கு கௌரவத்தை வழங்குதல், தேசிய மொழி தொடர்பாக மீள ஆராய்தல், வடக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சியை நீக்குதல் போன்றன இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.  

சிறிலங்காவில் நிலவுகின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

"சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதனை அடிப்படையாகக் கொண்டே இந்நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கான பாதைகளை வழிவகுப்பதாக அனைத்த மதங்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்" என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர இக்கருத்தமர்வில் தெரிவித்தார்.

"இவற்றை அடைவதற்காக கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அடையாளங் கண்டுகொள்ளவேண்டும். மாறாக அவற்றை மூடிமறைத்துவிடக்கூடாது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்துப் பகிர்ந்து கொண்டார்.

"நாங்கள் புதியதோர் யுகத்தில் காலடி வைக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் செயற்படக் கூடாது" எனவும் இக்கருத்தரங்கின் போது கருத்து  வெளியிட்டிருந்த தமிழ் அரசியல்வாதி தனது கருத்தின் ஊடாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

"நாங்கள் போரை மட்டுமே வென்றிருக்கின்றோம். உண்மையான சமாதானத்தை இன்னமும் வென்றெடுக்கவில்லை. எமது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது, தமிழர்களுக்கு எதிராகப் புதிய பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இளையோர்களுக்கு நாம் கொடுக்கின்ற செய்தி என்ன? இந்நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இப்போதாவது நாம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடு, சம உரிமை என்பன இல்லாத அபிவிருத்தி என்பது ஒரு கற்பனையே" என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரானது நிறைவுற்று இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்களுக்கிடையில் மொழிப் பாகுபாடு நிலவுகின்றது. சிங்கள மொழியானது உத்தியோகபூர்வ மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் காணப்படுகின்றது. சிறிலங்காவின் அரசியல் உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரு மொழியாகவும் சிங்களம் மட்டுமே உள்ளது.

"மொழி என்பது அடிப்படையில் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஏனைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தனது உரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதி எனக் கருதப்படுகிறார். அரசியல்வாதிகள் தமது பரிந்துரைகளை நடைமுறைக்கேற்ப முன்வைக்க வேண்டும்" என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரான சுஜீவா சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரோ அல்லது அவரது ஆட்சியோ ஏதாவது தவறு விடும்பட்சத்தில் ஒருபோதும் விமர்சிப்பதில்லை என கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த கிறீஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களை நோக்கி சேனசிங்க தெரிவித்துக் கொண்டார்.

சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும், வடக்கில் பெருமளவில் காணப்படும் இராணுவத்தினராலும் அவர்களது ஆட்சியினாலும் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், இதனால் இம்மக்கள் சொல்லொணத் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த மங்களராஜ் அடிகள்  சுட்டிக்காட்டினார்.

Wednesday, August 10, 2011

லண்டனில் வன்முறைகள் - கோத்தாபயவுக்கு சுவாரசியமாம்

லண்டனில் கலவரங்களை அடுத்து பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்- மோதலுக்குப் பிந்திய சூழலை பிரித்தானியா எவ்வாறு கையாளப் போகிறது என்று சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்டுநாயக்கவில் சிறிலங்கா காவல்துறையினர் வன்முறைகளைக் கையாண்ட விதத்தை விமர்சித்தவர்கள் லண்டனில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க மோதலை அடுத்து ஜேர்மனித் தூதுவர் சிறிலங்காவை அச்சுறுத்தும் அளவுக்குச் சென்றதாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலும் ஏனைய நகரங்களிலும் வசிக்கும் சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்பை பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.

அத்துடன் உலகின் ஏனைய பகுதிகளில் உள்நாட்டு அமைதியின்மையை ஊக்குவிக்கும் மூலோபாயம் ஆபத்தானது என்றும் அதையிட்டு கவனமாக இருக்க வேண்டும் அவர் பிரித்தானியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

Tuesday, August 9, 2011

சீனாவை சென்றடைந்தார் மகிந்த – அரசுமுறைப் பயணம் என்றும் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளார்.

பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரையும் அவருடன் சென்ற குழுவினரையும் சீனாவின் நிறைவேற்று உதவி வெளிவிவகார அமைச்சர் சங் சியுன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

சீன அதிபரின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு சீனஅதிபர் ஹுஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியொரும் சீனா சென்றுள்ளனர்.

முன்னதாக மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அரசுமுறையற்றது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இது அரசுமுறைப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சீனாவின் ஆதரவைப் பெறவே அவர் அங்கு சென்றுள்ளதாக கூறியுள்ளது.

ஜெயலலிதா தனது அரசியல் சுயலாபத்திற்காக மேற்கொண்ட தீர்மானம் - கோத்தாபய

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளார்.

பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரையும் அவருடன் சென்ற குழுவினரையும் சீனாவின் நிறைவேற்று உதவி வெளிவிவகார அமைச்சர் சங் சியுன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

சீன அதிபரின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு சீனஅதிபர் ஹுஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியொரும் சீனா சென்றுள்ளனர்.

முன்னதாக மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அரசுமுறையற்றது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இது அரசுமுறைப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சீனாவின் ஆதரவைப் பெறவே அவர் அங்கு சென்றுள்ளதாக கூறியுள்ளது.

சிறிலங்காவுடன் கடல் ஒப்பந்தம் - மாலைதீவு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மாலைதீவு கடற்பரப்பின் ஊடாக சிறிலங்காவிற்குச் சொந்தமான கப்பல்கள் போக்குவரத்துச் செய்வதற்கான உடன்படிக்கை ஒன்றை எந்தவொரு முன்னறிவித்தலுமின்றி சிறிலங்காவுடன் மேற்கொண்டதைக் கண்டித்தும் அந்த உடன்படிக்கையை உடனடியாக நீக்கம் செய்யுமாறும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசாங்கத்திடம் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Dhivehi Rayyithunge Party -DRP  என்னும் மாலைதீவு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி சலீமின் தலைமையிலேயே நேற்றைய தினம் மாலைதீவு நாடாளுமன்றில் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மாலைதீவு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒப்பந்தம் தொடர்பான செய்தி சிறிலங்கா ஊடகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால்  இந்த உடன்படிக்கை தொடர்பாக மாலைதீவு ஊடகங்களுக்கு  மீன்பிடித்துறை அமைச்சரான கலாநிதி இப்ராகிம் டிடி மற்றும் மாலைதீவு அதிபரின் ஊடகச் செயலாளரான மொகமட் சுகேயர் ஆகியோரால் வழங்கப்பட்ட செய்திகள் ஒன்றிற்கொன்று முரண்பட்ட நிலையிலிருந்தன. இதனாலேயே மாலைதீவு எதிர்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

"சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் பின்னால் என்ன உள்ளது  என்பது தொடர்பாக நாடாளுமன்றம் பார்க்கவேண்டியுள்ளது" என தனது ஆரம்ப கட்டக் கருத்துரையின் போது சலீம் தெரிவித்துள்ளார்.

"அரேபியக் கடலூடாகப் பயணிக்கும் சிறிலங்காக் கப்பல்கள் சுறாக்களையோ அல்லது மீன்களையோ காவிச்சென்றாலும் கூட நீங்கள் அது பற்றி ஏதாவது அறிந்திருப்பீர்களா?  நேற்றைய தினம் தான் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஒருபோதும் அதுபற்றி அறிந்திருக்க முடியாது" எனவும் சலீம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் பின்னால் 'பல விடயங்கள் ஒளிந்திருப்பதாக' நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவுக் கடற்பரப்பின் ஊடக சிறிலங்காக் கப்பல்கள் பயணிப்பதற்கான உடன்படிக்கை எந்தக் கடற்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக சிறிலங்காத் தூதரகத்திற்கு 48 மணிநேர முன்னறிவித்தலை வழங்குமாறும் நாடாளுமன்ற விவாதத்தின் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

"இந்த உடன்படிக்கை தொடர்பாக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட ரீதியற்ற மீன்பிடி என்பது பொய்த் தகவலாகும். இது தொடர்பான சரியான தகவல்களை நாம் கண்டறிந்துகொள்வதே மிகச் சிறந்ததாகும்" என மாலைதீவைத் தற்போது ஆட்சிசெய்கின்ற மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மொகமட் சசீட் தெரிவித்துள்ளார்.

"தற்போது செய்துகொள்ளப்பட்டுள்ள கடல் ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுமாயின், அதற்கு முன்னர் மாலைதீவிற்குச் சொந்தமான மீன்பிடி வலயங்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வருமானங்கள் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாலைதீவு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்" என DRP யின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிவெறி குசெயின் மொகமட், நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் நடுநிலையான, ஒருநிலைப்பட்ட மாலைதீவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன் பல நூறு ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ள மாலைதீவு நாடு பெரும் ஆபத்தை சந்திக்கலாம் என DRP யின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி அறிப் தெரிவித்துள்ளார்.

"மாலைதீவு ஜனநாயகக் கட்சியானது ஆட்சியமைத்துக் கொண்ட 2008 தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அக்கட்சியால் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகாரமளித்திருந்தது. இதற்கு நன்றிக்கடனாக தற்போது சிறிலங்காவுடன் கடலொப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என நான் நம்புகின்றேன்" என Jumhooree கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் முத்தலிப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கான போதியளவு ஆற்றல் மாலைதீவு மீனவர்களிடம் இல்லை என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்ட கருத்தை மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மொகமட் சிபாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சட்டரீதியற்ற மீன்பிடித் தொழிலானது கண்காணிக்கப்படாதுவிடில் மாலைதீவின் உள்நாட்டு மீன்பிடித்துறையானது பெரும் ஆபத்தைச் சந்திக்கும் என மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அண்மைக் காலங்களில் சிறிலங்காவிற்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவுக் கடற்பரப்பில் சட்ட ரீதியற்ற மீன்பிடியில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் தஸ்மீன் அலி குறிப்பிட்டுள்ளார்.

"எமது நாட்டுக் கடல் எல்லைகளுக்குள் சட்டரீதியற்ற விதத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டுக் கப்பல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்து நிறுத்தக் கூடிய வலு எமது நாட்டு அரசாங்கத்திற்கோ அல்லது எமது நாட்டிற்கோ இல்லை என்பது எமது நாட்டு மீனவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும. அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கடல் உடன்படிக்கையானது எமது நாட்டின் பொருளாதார வலயத்தினைக் கண்காணிப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்" என அஹ்மட் தஸ்மின் அலி மேலும் எச்சரித்துள்ளார்.

மீன்வளத்தைக் குறைக்கக் கூடிய சுறா வகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கின்ற செயற்பாட்டில் சிறிலங்கா மீன்பிடிக் கப்பல்கள் ஈடுபட்டுவருவதாகவும் தஸ்மீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கடல் சார் உடன்பாடொன்றை மேற்கொள்வதற்கு முன்னர் 'பரந்த விட்டுக்கொடுப்புக்கள்' இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சித்தலைவரான தஸ்மீன் தெரிவித்துள்ளார்.

"இதற்கு முன்னிருந்த அரசாங்கம் 1982 ல் ஐ.நாவின் கடற்சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டிருந்தது. இதன் பிரகாரம், எந்தவொரு வெளிநாட்டுக் கப்பல்களும் அனைத்தலகக் கடற்பரப்பின் ஊடாகப் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்" என மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் கம்சா தெரிவித்தார்.

சாதாரண போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கான அனுமதி மட்டுமே இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான கப்பல்கள்கள் பயணிப்பதற்கான அனுமதி மிகக் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சாசனத்தின் பிரகாரம் தான் சிறிலங்காவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது உத்தியோகபூர்வமாக கண்டறியப்பட்ட பின்னர் இது தொடர்பான விவாதம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என கம்சா ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி வழிமூலம்: Minivan News

Monday, August 8, 2011

அமெரிக்கப் போர்விமானங்கள் தற்செயலாகவே நுழைந்தனவாம் – செய்தித்துளிகள்

அமெரிக்காப் போர் விமானங்கள் சிறிலங்காவின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது தற்செயலான சம்பவமே என்றும், இதில் உள்நோக்கங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் 7ஆவது படையணிக்குச் சொந்தமான 10 போர் விமானங்களைக் கொண்ட அணியொன்று, சிறிலங்கா வான்பரப்பில் 380 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஊடுருவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் சிறிலங்கா விமானப்படை தொடர்பு கொண்ட போது, தமது படைப்பிரிவு பயிற்சியில் ஈடுபடுவதாகவும், இதன்போதே தற்செயலாக சிறிலங்கா வான்பரப்புக்குள் விமானங்கள் வந்ததாகவும் அவர்கள் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வான்எல்லைக்குள் ஊடுருவிய போர் விமானங்களுடன் சிறிலங்கா விமானப்படைத் தலைமையகம் தொடர்பை ஏற்படுத்தி, அது தொடர்பாக அறிவித்ததை அடுத்து அந்த விமானங்கள் எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதாகவும், இதுதொடர்பாக பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சீனா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர் – அரசுமுறைப் பயணம் இல்லையாம்

சீன அதிபர் ஹுஜின்டாவோவின் அழைப்பின் பேரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருப்பதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஒரு அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் சீனாவில் தங்கியிருக்கும் போது மகிந்த ராஜபக்ச, சீன அதிபர் ஹுஜின்டாவோவை பெய்ஜிங் நகரிலும், சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சென்சென் நகரிலும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் ரஸ்யாவில் சிறிலங்காஅதிபரை சந்தித்த போது அவரை பெய்ஜிங் வருமாறு சீன அதிபர் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அந்த அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார செயலர் காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார செயலர் றொமேஸ் ஜெயசிங்க இன்று காலமானதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான அவர், 2009 ஒக்ரோபர் 1ம் நாள் தொடக்கம் கடந்த மார்ச் 28ம் நாள் வரை சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலராக பணியாற்றியிருந்தார்.

இவர் இந்தியா, பெல்ஜியம், லக்சம்பேர்க், ஐரோப்பிய ஒன்றியம், ஆகியவற்றுக்கான தூதுவராகவும், பொன், ஜெனிவா, டாக்கா போன்ற நகரங்களிலுள்ள சிறிலங்கா தூதரகங்களில் இராஜதந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணப்படம் வெளிநாடுகளுக்கு

சனல்-4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அவற்றை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆதாரங்களை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்தவாரம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை- மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 குற்றம்சாட்டுவது போன்று சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்று, அந்த ஆவணப்படத்தில் தளபதி சூசையின் மனைவி, முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி, தயாமாஸ்ரர் உள்ளிட்டோரை சிறிலங்கா அரசாங்கம் சாட்சியமளிக்கச் செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை தாம் கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கும், வெளிநாடுகளிலும் உள்ள இராஜதந்திர மையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பொதுசனத்தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு, இரணைமடுவுக்கும் வர்த்தக விமானசேவை

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு, இரணைமடு விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வர்த்தக விமானப் போக்குவரத்துகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கிளிநொச்சி ஓடுபாதையை புனரமைத்து வர்த்தக விமானப் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, இரணைமடு, முல்லைத்தீவு ஓடுபாதைகளும் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவற்றையும் வர்த்தக விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே பெல்-212, பெல் 412 உலங்குவானூர்திகள், வை-12 விமானம் ஆகியவற்றின் மூலம் வர்த்தக விமான சேவைகளை காங்கேசன்துறை, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுர, பலாலி உள்ளிட்ட பல இடங்களுக்கும் நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலிய வாழ் தமிழர்களுக்கு கேசி தமிழ்மன்றம் விடுக்கும் அழைப்பு

அவுஸ்ரேலியாவில் நாளை 9ம் நாள் 2011ம் ஆண்டுக்கான சனத்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இதற்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தில் 16வது, 18வது வினாக்களுக்கு ‘தமிழ்‘ என்று பதிலளிக்குமாறு அவுஸ்ரேலிய வாழ் தமிழர்களை கேசி (Casey) தமிழ்மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சனத்தொகைக் கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பும்போது அல்லது இணையத்தில் நிரப்பும் போது,
16வது வினாவான வீட்டில் பேசும் மொழி என்ன? என்ற கேள்விக்கு ‘தமிழ்‘ என்று பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 18வது வினாவான, உங்களின் பூர்வீகம் என்ன? என்ற கேள்விக்கும் தமிழ் என்று பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சனத்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கங்களின் அபிவிருத்தி, ஆங்கிலம் அல்லாத பிறமொழி பேசுபவர்களுக்கான சலுகைகள், வசதிகள், உதவிகள் குறித்த முடிவுகளின் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன.

இந்தப் படிவத்தில் தமிழ் என்று அடையாளப்படுத்துவதன் மூலம் அவுஸ்ரேலிய வாழ் தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ்பண்பாட்டை புகட்டும் பாடசாலைகளுக்கு அவுஸ்ரேலிய அரசின் உதவிகள், ஊக்கத்தொகை கிடைக்கச் செய்ய முடியும்.

அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் தமிழ்மொழிபெயர்ப்பாளருடன் உரையாடுவது அல்லது தகவல்களை தமிழில், பெறுவதற்கும், பொதுநூலகங்களில் தமிழ் நூல்களை வழங்கச் செய்யவும், ,எஸ்பிஎஸ் போன்ற தொலைக்காட்சிகளில் தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்பச் செய்யவும் இதன்மூலம் வழிசெய்யலாம்.

இதுபோன்ற பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள உதவக் கூடும் என்பதால், சனத்தொகை கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யும் போது 16, 18வது வினாக்களுக்கு தமிழ் என்று பதிலளிக்குமாறு கேசி தமிழ்மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Sunday, August 7, 2011

சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு

"கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [International Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது.

கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief Minister Oommen Chandy] மற்றும் திரைப்படத்துறை அமைச்சரான கே.பி.கணேஸ் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சில மணித்தியாலங்களிற்கு முன்னர், புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இப்பட உருவாக்குநரான சோமீதரன் மிரட்டப்பட்டார்.

"கேராளவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட நான் முயற்சிப்பதாக ஊடகமொன்றில் வந்த செய்தியை அடுத்து நான் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டேன். நேற்று நான் தங்கியிருந்த இடத்திற்கு புலனாய்வு அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் அந்த வேளையில் நான் அங்கிருக்கவில்லை. கைராலி திரையரங்கில் இருந்தேன். பின்னர் எனது திரைப்படத்தின் DVD யைத் தரும்படி அவர்கள் என்னைக் கேட்டார்கள்" என சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்த உறுதி மிக்க திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று நடைபெற்று முடிந்த திரைப்பட விழாவில் சோமீதரன் பாராட்டப்பட்டுள்ளார். பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்து இடர்களின் மத்தியில் தனது திரைப்படத்தை திறம்பட இவர் உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்பட விழாவில் இவரது பெயர் அறிவிக்கப்பட்ட போது தனது ஆசனத்தை விட்டு எழுந்து சிறிது தூரம் நடந்து சென்று பின் மீண்டும் நின்று தனது பெயர் தான் அறிவிக்கப்படுகின்றதா என உறுதிப்படுத்தியபோது சோமீதரன் மிகப் பெரும் ஆச்சரியம் அடைந்ததாகத் தெரிவித்தார்.

"அந்தக் கணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியாதுள்ளது. இங்கிருக்கும் மக்கள் எனது திரைப்படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதே எனக்குக் கிடைத்த பாராட்டுதலுக்கான காரணமாகும். இந்தப் பாராட்டு என்பது வேறு எங்கும் நடந்திட முடியாது. தமிழ் நாட்டிலும் கூட" என சோமீதரன் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக இழந்த தனது நண்பர்களையும் இவர் நினைவு கூர்ந்தார்.

"இது போருக்குப் பிந்திய காட்சிகள். இவற்றில் பெரும்பாலனவை அதிர்ச்சி தரக் கூடியவை. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது வீடுகள், தொழில்கள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்தனர். விவசாயம், மீன்பிடி போன்றவற்றை மேற்கொள்வதில் பெரும் தடைகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் உட்பட சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற அல்லது செயற்படுபவர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள்" என சோமீதரன் தெரிவித்தார்.

"சில மக்கள் ஐந்து தடவைகளுக்கும் மேல் இடம்பெயர்ந்து பல மாதங்கள் காடுகளில் ஒளிந்து வாழவேண்டியவர்களாகவும் இருந்தார்கள். எனது திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் யுத்தப் பாதிப்பிற்குள்ளான இடங்களில் வாழும் எனது நண்பர்களால் எடுக்கப்பட்டவையாகும். இவர்கள் இவற்றை எடுத்த பின்னர் அதற்குள்ளிருக்கும் நினைவக அட்டையை மட்டும் எடுத்துவிட்டு ஒளிப்படக் கருவிகளைத் தூர வீசிவிடுவார்கள். பின்னர் இந்த நினைவக அட்டைகள் பலரது கைகளுக்கு மாறி இறுதியில் என்னை வந்து சேரும்" என சோமீதரன் தெரிவித்தார்.

முதல் மூன்று மாதங்களும் இத்திரைப்படக் காட்சிகளை தன்னால் தொகுக்க முடியாதிருந்ததாக சோமீ குறிப்பிட்டார். "இக்காட்சிகளைப் பார்த்த பின்னர் எங்களால் அவற்றைத் தொகுக்க முடியவில்லை. எங்களால் உண்ணவோ அல்லது உறங்கவோ முடியவில்லை. முதலில் எம்மிடம் ஆறு மணித்தியாலக் காட்சிகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானவை. இதில் 30 நிமிடக் காட்சிகளை மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளேன். ஏனைய ஐந்தரை மணி நேரக் காட்சிகள் அடங்கிய தொகுப்புக்கள் என்னிடம் உள்ளன" என சோமீ தெரிவித்தார்.

சோமீதரன் தனது திரைப்படத்திற்காக இராணுவக் காட்சிகள், ஐ.நாவின் செய்மதி வழி ஒளிப்படங்கள், வலையமைப்புகள் மூலம் நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளார்.

29 வயதான திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன், தனது ஆவணப்படத்திற்கு முல்லைத்தீவு பகுதியில் ஆடப்படும் வீரப்பெண்ணாக சித்தரிக்கப்படும் 'கண்ணகி கூத்தை' குறியீடாகவும் அடிப்படையாகவும் பயன்படுத்தி உள்ளார்.

அழுகுரல்கள், இடப்பெயர்வுகள், சாவுகள், இறந்த உடலங்கள், உதவியற்ற சிறார்களின் முகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி சோமீதரனால் உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு சகா ‘Mullaitivu Saga’ என்ற இத்திரைப்படமானது இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் உணர்வற்ற மனிதர்களைக் கூட உள்ளம் நெகிழ வைத்துவிடும்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக சோமீதரனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆவணப்படமாக இது அமைந்துள்ளது. 47 நிமிட நேரத்திரைப்படமான 'முல்லைத்தீவு சகா' சில ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவை உள்ளடங்கலாகப் பல நாடுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இவரது நண்பர்கள் தாம் வசிக்கும் நாடுகளுக்கு சோமீதரனை வரும்படி அழைக்கின்றார்கள்.

"நான் எனது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவே விரும்புகின்றேன். அது முடியாவிட்டால் இந்தியாவிலாவது எனது வாழ்வைத் தொடரவேண்டும் என நான் விரும்புகின்றேன். கேரளாவின் நில அமைப்பு மற்றும் ஓட்டு வீடுகள் போன்றன எனது தாய்நாட்டின் உணர்வையே எனக்கு ஏற்படுத்துகின்றது. உங்களுக்கு தெரியுமா, நாங்களும் அப்பம், பிட்டு போன்ற உணவுகளையே உண்கின்றோம்" என சோமீதரன் தெரிவித்துக் கொண்டார்.

செய்தி வழிமூலம்: Express News Service, The New Indian Express

Saturday, August 6, 2011

ஜேர்மனிக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மீது போர்க்குற்றச்சாட்டு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் பிரதித் தூதராகக் கடமையாற்றுகின்ற ஜெகத் டயசிற்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை இருமனித உரிமைக்குழுக்கள் குழுக்கள் முன்வைத்துள்ளன.

26 ஆண்டுகளாகத் தொடர்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது மே 2009 இல் நிறைவுக்கு வந்தபோது சிறிலங்காப் படைகளை வழிநடத்திய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது யுத்தக் குற்றங்களை முன்வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்களிற்கான அமைப்பு மற்றும் TRIAL ஆகிய சுவிஸைத் தளமாகக் கொண்டியங்கும் இரு மனித குழுக்களும் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக தாம் இரகசிய முறைப்பாடொன்றை சுவிஸ் நாட்டின் பிரதம வழக்கறிஞரிடம் மேற்கொண்டுள்ளதாகவும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது 80,000 தொடக்கம் 100,000 வரையானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரில் சில பகுதிகளுக்குப் பொறுப்பாகவிருந்து யுத்தத்தை வழி நடத்திய டயஸ் செப்ரெம்பர் 2009ல் ஜேர்மன், சுவிற்சர்லாந்து மற்றும் வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதராக நியமிக்கப்பட்டார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதென்பது மிகவும் இலகுவானதெனவும், ஆனால் ஒரு போர்க்குற்றவாளி என்பதைத் தான் மறுப்பதாகவும் பேர்லினிலுள்ள தனது தூதரக பணியகத்தில் இருந்து டயஸ் தெரிவித்தார்.

"எந்தவொன்றிற்காகவும் யாரையும் யாரும் குற்றம் சாட்டமுடியும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையானதாக இல்லை. நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புக்களும் ஏற்படக்கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றியிருந்தோம். உண்மையில் நாங்கள் மக்களை அழிக்க வேண்டும் என நினைத்திருந்தால், எங்களால் 300,000 வரையான மக்களை எவ்வாறு காப்பாற்றியிருக்க முடியும் அல்லது விடுவித்திருக்க முடியும்" என டயஸ் Associated Press  இடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் யுத்தம் முடிவிற்கு வந்த போது அதிலிருந்து உயிர் தப்பிய 300,000 வரையான மக்கள் சிறிலங்காவின் வடபகுதியிலுள்ள காடுகளில் அமைக்கப்பட்ட முகாங்களில் தங்கவைக்கப்பட்டதுடன், அதில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் களைந்தெடுக்கப்பட்டனர்.

டயஸின் கீழ் செயற்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் வைத்தியாசாலைகள் மற்றும் மக்கள் வாழிடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்குப் பொறுப்பாளிகளாவர் என ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் சாட்சியங்களிலிருந்தும் ஏனைய அனைத்துலக நிறுவனத் தகவல்களிலிருந்தும் அறியக் கூடியதாகவுள்ளதாக சுவிஸ் குழுக்கள் முறையீடு செய்துள்ளனர்.

"யுத்தக் குற்றங்களுக்கு எதிராக சுவிற்சர்லாந்தானது தனது எதிர்ப்பைக் காட்டுவதற்கான மிகப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பமாக உள்ளது" என இக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாகத் தாம் ஆராய்ந்து வருவதாக சுவிற்சர்லாந்தின் வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த விடயமானது சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்புபட்டுள்ளதால் இதனைத் தாம் தமது கவனத்தில் எடுத்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தூதர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் களமுனைத் தளபதிகளில் டயசும் ஒருவராவார். "அனைத்துலக நிறுவனங்களாலும் மனித உரிமைகள் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நாம் தற்போது ஜெகத் டயசிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளோம். டயஸ் ஒரு தூதராக இருக்கின்ற போதிலும், அவர் சுவிற்சர்லாந்தில் வைத்துக் கைதுசெய்யப்படலாம் என நாம் கருதுகிறோம்" எனவும் TRIAL சார்பாக வாதிடும் வழக்கறிஞரான Benedict De Moerloose   தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றக்காட்சிகளை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றை பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவை வெளியிட்டிருந்தது. இதில் காண்பிக்கப்பட்டவாறு சரணடைந்தவர்கள் மீது சிறிலங்கா இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வருமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு கடந்த மேயில் அழைத்திருந்தது.

இது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றவரான டயஸ், 1983-2009 வரை முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத புலி ஆதரவுக் குழுக்களால் உருவாக்கப்பட்ட போலியான ஆவணப்படத்தையே சனல் 04 வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

"இது போலியானது. இதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை" எனவும் டயஸ் மேலும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்திக் கூறியது.  ஆனால் இதற்கு மாறாக யுத்தம் இடம்பெற்ற இறுதி ஐந்து மாதங்களில் 7000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசுகிறது - இந்திய ஊடகவியலாளர்

தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனேநிலையைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணையத்தளத்தில் அதன் செய்தியாளர் கொழும்பில் இருந்து எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள தமிழர் பகுதிகளின் ஊடாகப் பயணிப்பவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சில மாற்றங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய தேசமாகவும் தமிழர்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தி நின்றதுமான இந்தப் பிரதேசங்கள் தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன. அதாவது தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர்சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.


A recently constructed Buddhist stupa at Kanagarayankulam


A huge Buddha statue at Kilinochchi, the erstwhile capital of Tamil rebels


A Sinhala-only signboard at an important junction in Puthukudyiruppu


A Sri Lankan defence outpost in Puthukudyiruppu with name board in Sinhalese and English

அத்துடன் தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தப் பிரதேசங்களில் உள்ள மக்கள் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். தமிழர்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அவர்களின் இதயபூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை சிங்களமயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிடலாம்.  

சிறிலங்காவின் வடபகுதிக்கான நுழைவாயிலாக உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியானது 'ஓமந்த' என்ற நிங்கள உச்சரிப்பிலேயே உச்சரிக்கப்படுகின்றது.

ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாகப் பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களாவர். ஆனால் இங்கு கடமையில் நிற்கும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனேநிலையைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.
 
சிங்கள இராணுவ வீரர்களும் அவர்களது இராணுவ முகாங்களும் தமிழர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன. சிறிலங்கா மக்கள் வாழக் கூடிய 65,619 சதுரகிலோமீற்றரில் 18,880 சதுரகிலோமீற்றர் தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும்.

ஆனால் மே 2009 ல் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தமிழர் வாழ் பிரதேசங்களில் 7000 சதுரகிலோமீற்றரை பாதுகாப்புப் படையினர் தமது ஆளுகைக்குட்படுத்தியுள்ளனர். இங்கிருந்த 2500 சைவ ஆலயங்களும், 400 கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு அழிக்கப்பட்ட வணக்க தலங்களை மீளப்புனரமைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் இத்தலங்களில் அதிகமானவை முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் மட்டுமே பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் இந்தப் பிரதேசங்களில் 2500 புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்திலுள்ள பிரபலம் மிக்க திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட இராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. திருக்கேதீச்சரத்தின் புராதன பெயர் மாதோட்டம் ஆகும்.

இவற்றை தமிழர் வாழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் 'வடக்கின் வசந்தம்' என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அடிக்கட்டுமானப் பணிகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், விளையாட்டு, கலாசார விடயங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு விடயங்கள் 'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

எதுஎவ்வாறிருப்பினும், இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளாக உள்ள தமிழர்களை இது அதிகம் சென்றடையவில்லை. மாறாக வேலையற்ற சிங்கள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர்.  தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வடக்கின் வசந்தம்' திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர்களாக சிங்களவர்களே உள்ளனர்.

அடுத்தது இத்திட்ட அமுலாக்கலில் முக்கிய இடத்தில் பாதுகாப்புப் படைகள் உள்ளன. பாதுகாப்புப் படையினர் வீதிப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

புதிதாகக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி செட்டிக்குளத்தில் இடம்பெற்றுவருகின்றது. மீள்குடியேறியள்ள அனைத்த மக்களுக்கும் இத்திட்டம் மேற்கொள்ளப்படுமானால் இதனை எல்லோரும் வரவேற்பார்கள். ஆனால் மாறாக 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைவிட, கொக்கச்சன்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும்பங்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது கொச்சான்குளம் என்பது 'காலபொவசெவௌ' Kalabowasewa எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மடு வீதியை அண்மித்து உள்ள தமிழ்ச் சிறார்களுக்கான பாடசாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள இந்நிலையில், இப்பாடசாலைகள் திருத்தப்படாது புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களச் சிறார்களுக்கான சிங்கள மொழிப் பாடசாலை ஒன்று புதிதாகக் கட்டப்படுகின்றது.

ஆயுதப் படையினரின் அனுமதிகளுடன் தமிழர் பிரதேசங்களில் உள்ள காடுகளில் நுழையும் சிங்களவர்கள் காட்டு மரங்களை பெருமளவில் அரிந்து செல்வதாகவும் இதனால் காட்டு வளம் நாசமாக்கப்படுவதாகவும் உள்ளுர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழர் வாழ் பிரதேசங்களிற்கு வருகை தரும் சிங்கள தொல்லியல் துறை வல்லுனர்கள் வடக்கில் பெருமளவான பௌத்த சிலைகள் காணப்படுவதாகக் கதைவிடுகின்றனர்.

சிறிலங்காவின் வடக்குப் பகுதியானது சிங்கள மக்களின் பூர்விக இடமா எனத் தற்போது எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்டே தொல்லியல் துறையினர் பொய்ப் பரப்பரைகளை மேற்கொள்கின்றனர்.

சிங்களத்தால் எழுதப்பட்ட  இட அடையாளப் படுத்தும் ஒரு சில பெயர்ப்பலகைகள் காணப்பட்ட வடக்குப் பகுதியில் தற்போது பெருமளவான சிங்களப் பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.

முல்லலைத்தீவு மற்றும் ஏனைய சில பிரதேசங்களில் உள்ளவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு அனுதிக்கப்படவில்லை. ஆனால் அதேவேளையில் இந்தப் பிரதேசங்களில் உள்ள கடல்களில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.  

2009ம் ஆண்டிலிருந்து அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மகஜர்களும் சிங்களத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உள்ளுர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னர் தமிழ்ப் புலிகளின் நிர்வாகத் தலைமையமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மகிந்த ராஜபக்சா மாவத்தை, அலுத் மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஏ-09 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன்குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு  கொசல பெரேரா வீதி, அனுரா பெரேரா வீதி, வணக்கத்திற்குரிய யற்றிராவன விமல தேர வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

முதல் இரண்டும் யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களாகவும், மூன்றாவது வீதிக்கான பெயர் புத்த பிக்கு ஒருவரின் பெயருமாகும்.

இவை எல்லாம் எதனை நோக்கிச் செல்கின்றன? இதற்கான பதிலைக் காலம் மட்டுமே கூறும். 

Friday, August 5, 2011

புலிகளின் தளபதி ரமேசை தடுத்து வைத்திருக்கவில்லை – கோத்தாபய ராஜபக்ச

விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் ரமேஸ் சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் இருக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேணல் ரமேஜ் இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைகாரர் என்றும் கிழக்கில் சரணடைந்த 650 காவல்துறையினரின் கொலையுடன் தொடர்புபட்டவர் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

அவர் தடுப்புக்காவலில் இருக்கவில்லை. அவர் 650 சிறிலங்கா காவல்துறையினரின் கொலைகளுக்கும், பிக்குகளின் கொலைக்கும், அப்பாவி பொதுமக்களினதும் கொலைகளுக்கும் பொறுப்பானவர் என்றும் தீவிரவாதியான அவரைப் பற்றி தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடையச் சென்ற கேணல் ரமேஸ், சண்டையின் போது கொல்லப்பட்டதாக சிறிலங்கா படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

சரணடைந்த கேணல் ரமேசை சிறிலங்கா படையினர் விசாரணை செய்யும் காணொலிப் பதிவு ஒன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கடந்த எப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு

அமெரிக்கப் படை அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளது.

கடந்த முதலாம் நாள் கிளிநொச்சி சென்ற அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் தலைமையிலான அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு, கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவையும் சந்தித்துப் பேசியுள்ளது.

அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இவர்கள் நேரில் ஆராய்ந்துள்ளனர்.

லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் கடந்த மாதமே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, August 4, 2011

சென்னைத் தாக்குதல் – இராஜதந்திர நடவடிக்கை எடுக்கிறதாம் சிறிலங்கா

சிங்களச் சுற்றுலாப் பயணிகள் சென்னையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, புதுடெல்லியன் கவனத்துக்குக் கொண்டுவர சிறிலங்கா அரசு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசுடன் எந்தவிதமான தொடர்புகளையும் சிறிலங்கா வைத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வைகோ போன்றவர்களின் ஆவேசமான பேச்சுக்களாலேயே இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குற்றம்சாட்டியுள்ளார்.

இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் பகல் 1.30 மணியளவில், சிங்கள சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடத்துக்கு சென்ற 20 பேர் கொண்ட குழுவொன்று அவர்களை தாக்கியதாகவும் சிறிலங்கா அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

சிங்கள வாசகம் பொறிக்கப்பட்ட மேற்சட்டையை கழற்ற வைத்து தீயிட்டு கொளுத்திய அவர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற சிறிலங்கா தூதரக அதிகாரிகள் 84 சுற்றுலாப் பயணிகளையும் எழும்பூரிலுள்ள மகாபோதி நிலையத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சிறிலங்காவைச் சேர்ந்த 84 சுற்றுலாப் பயணிகளும் காவல்துறை பாதுகாப்புடன் நேற்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, August 3, 2011

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை – கருத்து வெளியிட ஐ.நா மறுப்பு

அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

நியுயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐ.நாவிடம் கையளிக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசிடம் இருந்து ஐ.நாவுக்கு அதிகாரபூர்வமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்து அனைத்துலக சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா: போரில் காணாமற்போன 600 சிறார்கள் என்னவானார்கள்?

சிறிலங்காவின் நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் 630 சிறார்கள் தொடர்பான விபரங்கள் அவர்களது இரத்த உறவுகளுக்குத் தெரியாதுள்ளதாக அரசாங்கத் தகவல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983ல் தமிழ் நாடு கோரிப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 2009 அன்று பெரும்பாலான தமிழ்ச்சிறார்கள் காணாமற்போயுள்ளனர்.
 
இச்சிறார்களில் 64 வீதமானோர் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பின் போது புலிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டவர்கள் என யுனிசெப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது 300,000 வரையிலான பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

யுத்தத்தின் போது தமது சிறார்களைப் பிரிந்த பெற்றோர் தமது பிள்ளைகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்த வண்ணமுள்ளனர். "எனது பணியகத்திற்கு வெளியில் அழுதவண்ணமிருந்த அந்தப் பெண்கள் தமது பிள்ளைகளைத் தேடித்தருமாறு என்னிடம் கேட்டார்கள்" என வவுனியா மாவட்டத்தில் உள்ள மூத்த அரசாங்க அதிகாரியான பியன்சியா சாள்ஸ் தெரிவித்தார்.
 
காணாமற்போன பிள்ளைகளின் குடும்பங்களுடன் தொடர்புகளைப் பேணும் பொருட்டு 2009 டிசம்பரில் குழுவொன்று உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"காணாமற் போனோர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதென்பது மிகக் கடினமான விடயமாகும். இந்தச் சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறை ஒன்றில்லை. இந்தச் சிறார்களின் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கிறார்கள்" என சாள்ஸ் மேலும் தெரிவித்தார்.

இச்சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக ஆளணி வளங்கள், பயிற்சிகள், மற்றும் தரவுத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கான உதவிகள் என்பவற்றை யுனிசெப் நிறுவனம் மேற்கொள்கின்றது. இற்றைவரை இவ்வாறு காணாமற் போன சிறார்களில் 600 பேர் வரையானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் 13 பேரது விபரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அத்துடன் 34 சிறார்களின் பெயர்கள் அவர்களது பெற்றோர்களால் தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரும் பொருட்டு வவுனியாவில் செயற்படும் சிறார்களைத் தேடிக் கண்டுபிடித்து மீளக் குடும்பங்களுடன் இணைக்கும் பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சில செயற்பாடுகளின் பின்னர் தற்போது தமது சிறார்களைக் காணவில்லை என அலைந்து திரிந்த பெற்றோர்களின் தொகை குறைந்துள்ளது. ஆனாலும் இது தொடர்பான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் கிராமத்தில் தற்போது  மீளக்குடியேறியுள்ள மூன்று பிள்ளைகளின் தாயாரான குலசேகரன் குகமதி 16 வயதுடைய தனது மூத்த மகனைப் பற்றிய எந்தவொரு செய்திகளும் கிடைக்காது மிகவும் வேதனையில் வாழ்கிறார்.

இந்த விதவைத் தாயின் மூத்த மகன் 2008ன் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இணைக்கப்பட்டிருந்தார். சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான சிறுவர் போராளிகள் தமிழ்ப்புலிகளால் பலவந்தமாக அவர்களது படையில் இணைக்கப்பட்டிருந்தனர் என சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதை எதிர்க்கும் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"2008ம் ஆண்டிலிருந்து இன்னமும் நான் எனது மகன் தொடர்பான எந்தவொரு செய்திகளையும் அறியவில்லை. அவன் எங்காவாது உயிருடன் இருப்பான் என நான் நம்புகின்றேன். அவனைத் தேடுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதற்கான போதியளவு நேரமோ அல்லது பணவசதியோ என்னிடம் இல்லை" என 44 வயதான குலசேகரன் குகமதி என்ற இந்தத் தாய் தெரிவித்தார்.
 
காணாமற் போன சிறார்கள் தொடர்பான ஏதாவது தகவல்கள் தமக்குக் கிடைக்கும் பட்சத்தில், தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு அத்தகவல்கள் சரியாக இருந்தால் உரிய பெற்றோர்களுடன் அவர்களது பிள்ளைகளை மீள இணைத்துவிடுவதாக வவுனியாவிலுள்ள யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சஜி தோமஸ் தெரிவித்தார்.

"எமது பிரிவில் சிறார்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் ஏனைய காணாமற் போன இளையோர்களின் பெயர்களும் பதிவாகியள்ளன. இதுவரையில் 2000 வரையிலானவர்களின் பெயர்கள் எமது தரவுத்தளத்தில் பதிவாகியுள்ளன" என தோமஸ் மேலும் தெரிவித்தார்.

"இந்த இளையோர் தொடர்பான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிதி நிறுவனம் ஒன்றை நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வாண்டின் இறுதிக்குள் இது தொடர்பான சாதகமான பதில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி வழிமூலம்: IRIN
மொழியாக்கம்: நித்தியபாரதி

சிறிலங்கா அதிபரால் நேரடியாக மிரட்டப்பட்ட ஊடகவிலாளர்

கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' பத்திரிகையில் வெளிவந்த "சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் செலவழிப்பதற்கென சீனா பெருந்தொகையான நிதியை வழங்கியுள்ளது" என்கின்ற செய்தியை அடுத்து யூலை 19 திகதியன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இப்பத்திரிகையின் இயக்குனரான லால் விக்கிரமதுங்கவை அச்சுறுத்தியுள்ளதை எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் [Reporters Without Borders] கண்டித்துள்ளது.

"சிறிலங்கா அதிபர் தொலைபேசி மூலம் பத்திரிகையாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்களை விடுகின்ற செய்தியானது எமக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறிலங்காவில் வெளியிடப்படுகின்ற ஒரேயொரு சுயாதீன ஆங்கிலப் பத்திரிகையான சண்டேலீடர் பத்திரிகையானது சிறிலங்கா அதிபரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சிறிலங்கா அதிபர் இப்பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக மறுப்புத் தெரிவிக்க விரும்பியிருந்தால், ஊடகங்களின் ஊடாக இதற்கான பதிலறிக்கை ஒன்றை விடுத்திருக்கலாம்.

இந்த விடயத்தை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துவதே உண்மையில் ஜனநாயக வழிமுறையாகும்.

"சிறிலங்கா அதிபரின் பொறுப்பற்ற நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம். ஒரு நாட்டினுடைய தலைவர் தனது மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டியவராவார். ஆனால் மகிந்த ராஜபக்ச மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்கின்ற தனது கொள்கையை மகிந்த ராஜபக்ச உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்" என எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ராஜபக்சா குடும்பத்து உறுப்பினர்களால் ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்ற சம்பவம் இது மட்டுமல்ல. இதற்கு முதலும் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களை உடனடியாகக் கைவிடுமாறு நாம் சிறிலங்கா அதிபர் மீத அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமிடத்து சிறிலங்காவிலுள்ள அனைத்து ஊடகங்களும் ஒன்று சேர்ந்து தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் எனவும் எல்லையற்ற பத்திரிகையாளர் சங்கம், அனைத்து சிறிலங்கா ஊடகங்களிடமும் வேண்டிநிற்கின்றது" எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யூலை 19 அன்று விக்கிரமதுங்க, சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றுக்கொண்டபோது, அதிபரால் விடுக்கப்பட்ட மிரட்டல் செய்தி பின்வருமாறு:
 
"பொய்யான செய்திகளை பிரசுரிக்கிறீர்கள். இவை அனைத்தும் மூர்க்கத்தனமானவை. உங்களது செய்திகள் மூலம் அரசியல் ரீதியான தாக்குதல்களை என்மீது மேற்கொள்ள முடியும்.  நீங்கள் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்க நினைத்தால், உங்களை எவ்வாறு தனிப்பட்ட ரீதியில் தாக்குவது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்"

'பொய் பேசவேண்டாம்', 'கடவுள் உங்களைத் தண்டிப்பார்' போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சண்டேலீடர் பத்திரிகையின் தலைமைச் செயலக மதில்களில் ஒட்டப்பட்டிருந்தன.

சிறிலங்கா அதிபரின் தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்படுவுதற்கு இரு நாட்களின் முன்னர் சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிறட்றிக்கா ஜான்ஸ் தனது பத்தியில், சீனாவானது சிறிலங்கா அதிபர் தனிப்பட்ட ரீதியில் செலவழிப்பதற்காக 09 மில்லியன் டொலர்களையும் அவரது மகனுக்கு அரை மில்லியன் டொலர்களையும் மானியமாக வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான தெளிவான பதிலை சிறிலங்கா அதிபருக்கு வழங்கும் முகமாக சண்டேலீடர் பத்திரிகையின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

சண்டேலீடர் பத்திரிகையானது நீண்டகாலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டுள்ள ஒரு பத்திரிகையாகும்.

லால் விக்கிரமதுங்காவிற்கு முன்னர் இப்பத்திரிகையின் இயக்குனராகச் செயற்பட்ட லசந்த விக்கிரமதுங்க 08,ஜனவரி 2009 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் முற்றுமுழுதாக நிறைவுசெய்யப்படவில்லை. இக்கொலையுடன் தொடர்புபட்ட எந்தவொரு குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

லசந்த விக்கரமதுங்காவின் படுகொலை தொடர்பான முறையான விசாரணைகளை உடனடியாக  மேற்கொள்ளப்பட வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது.

லசந்தவின் படுகொலையைத் தொடர்ந்து அவரது சகோதரனான லால் விக்கிரமதுங்க தற்போது இப்பத்திரிகையின் இயக்குனராகப் பொறுப்பேற்றுச் செயற்படுகின்றார். லால் விக்கிரமதுங்கவும் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளார்.

Tuesday, August 2, 2011

பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களும் கஸ்மீர் பண்டிற்களும்

“இனச்சுத்திகரிப்பு என்பதும் இனப்படுகொலை என்பதும் ஒன்றல்ல. இது சிறிலங்காவின் வடக்கிற்கு நன்றாகப் பொருந்துகின்றது. ஆனால் கஸ்மீருக்கு பொருத்தமற்றது“ இவ்வாறு கஸ்மீர் பண்டிற்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையுடன் ஈழத்தமிழர் பிரச்சினையை
ஒப்பிட்டு அலசியுள்ளார்- மும்பையைத் தளமாகக் கொண்ட “daily news & analysis' ஊடகத்தின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹா.

அவரது இந்த ஆய்வை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்யபாரதி.

கஸ்மீர் பிரச்சினை தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட- 'எனது சுதந்திரம் கிடைக்கும் வரை''- கஸ்மீரில் புதிய இன்ரிபடா மற்றும் சிக்கலான பிரச்சினை: ஜம்மு – கஸ்மீர்' ஆகிய இரு நூல்களிலும் இந்தியாவின் கஸ்மீர் மாநிலம் தொடர்பான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கஸ்மீர் மக்கள் மிகவும் விரும்புகின்ற அந்த மாநிலத்தின் சுதந்திரம் தொடர்பாக இந்தியப் பழமைவாதிகள் எந்தவொரு அர்த்தமுள்ள கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பாக இவ்விரு நூல்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளன.

கஸ்மீர் பண்டிற்கள்(Pandits) மற்றும் அவர்கள் தமது சொந்த இடத்தை விட்டு வெளியேறியமை தொடர்பான விடயம் இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

கஸ்மீர் இந்துக்கள் இந்தியாவிற்குள்ளே இடம்பெயர்ந்து வாழும் அதேவேளையில், ஜம்மு, டில்லி, மற்றும் இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும் மிகத் துன்பகரமான நிலையில் வாழ்கின்றார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

சிறிலங்காத் தமிழர்களைப் போன்று கஸ்மீர் இந்துக்களின் நிலையும் மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

கஸ்மீரின் பழமைவாதிகள் அங்கு வாழும் இந்துக்கள் மீதான 'இனச்சுத்திகரிப்பு' தொடர்பாக ஏதாவது விவாதங்களை மேற்கொள்கிறார்களா என்றால் ஒருபோதும் இல்லை என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக இவர்கள் கஸ்மீர் முஸ்லீம் மக்கள் தொடர்பாக மட்டும் தமது கருத்துக்களை கூறிவருகின்றனர். இது கஸ்மீர் இந்துக்களின் நிலைமையை பரிதாபத்திற்கு உள்ளாக்குகின்றது என்பதே சோகமானதாகும்.

ஜம்முவில் உள்ள மிஸ்றிவாலா முகாம் மற்றும் டில்லியிலுள்ள லஜ்பாட் நகர் முகாமைப் பார்வையிட்ட ஒரு சில பழமைவாதிகள் உட்பட அவர்களால் எழுதப்பட்ட ஆக்கங்களில் கஸ்மீர் இந்துக்களின் வாழ்க்கை சுயநலம்மிக்கது என்ற விடயத்தை வலியுறுத்தியே எழுதப்படுகின்றது.

'இனச்சுத்திகரிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள ஏழு இலட்சம் கஸ்மீர் இந்துக்களின் நிலை என்ன?' என பத்திரிகையில் வெளிவந்த எனது ஆக்கத்தை வாசித்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் தனது கடிதத்தின் மூலம் வினவியிருந்தார்.

1.42 லட்சம் பேரை உள்ளடக்கிய 38,119 குடும்பங்கள் கஸ்மீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் என ஜம்மு - கஸ்மீர் விடுதலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

21,684 பண்டிற் குடும்பங்கள் தற்போது புலம்பெயர்ந்து வாழ்வதாகவும் இதில் அதிகமானோர் டில்லியில் வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1989 இலிருந்து 219 கஸ்மீர் பண்டிற்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் இனவன்முறையானது ஆரம்பிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் 2008-2010 வரை இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எண்ணுக்கணக்கற்ற தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 இலிருந்து மூன்று இலட்சம் சிறிலங்காத் தமிழர்கள் புலம் பெயர்ந்து இந்தியாவில் வாழ்கின்றனர். புலம்பெயர் சிறிலங்கர்கள் மேற்கு நாடுகளிலேயே உள்ளனர். குறிப்பாக இரண்டு லட்சம் பேர் வரை கனடாவில் வாழ்கிறார்கள்.

தற்போது தமிழ்நாடானது சிறிலங்காத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான நிலை காணப்படவில்லை.

சிறிலங்கர்கள் தமது நாட்டிற்கு சீனர்களை வரவழைத்ததன் பின்னர் இந்தியாவானது மிகவும் அச்சமுற்றுள்ளது. அத்துடன் சிறிலங்காவும் பாகிஸ்தானும் மிக நெருக்கமான உறவைப் பேணிவருகின்றன.

அண்மையில் தமிழ்நாட்டு சபைக்கான தேர்தலில் மு.கருணாநிதி தோல்வியுற்றது உள்ளடங்கலாக பல்வேறு தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்தியாவானது சிறிலங்கா விடயத்தில் அமைதி காத்து வருகின்றது.

ஒரு இனக்குழுமமானது பிறிதொரு இனக்குழுமத்தின் மீதோ அல்லது, ஒரு மதசார் குழுவானது பிறிதொரு மதசார் குழு மீதோ, தனது வன்முறைகளை அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டு- அதன் ஊடாக பாதிக்கப்பட்ட இனக்குழுமத்தை அடியோடு வேரறுத்தலே இனச்சுத்திகரிப்பு எனப்படுகின்றது.

இங்கே குறிப்பிடப்படும் இனச்சுத்திகரிப்பு என்பதும் இனப்படுகொலை என்பதும் ஒன்றல்ல. இது சிறிலங்காவின் வடக்கிற்கு நன்றாகப் பொருந்துகின்றது. ஆனால் கஸ்மீருக்கு இது பொருத்தமற்றது.

இனச்சுத்திகரிப்பு என்பது கஸ்மீர் முஸ்லீம்களின் கொள்கையாக இருக்கவில்லை.

இந்த அடிப்படையில், கஸ்மீர் பண்டிற்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து அவர்களது வாழ்வை மீளப் புனரமைக்கும் நோக்குடன் அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு (All Parties Hurriyat Conference) கூட்டப்படுகின்றது.

கஸ்மீரில் இடம்பெற்ற மிகப் பெரும் இடப்பெயர்வுகளின் போது அங்கு வாழும் எல்லா சமூகங்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

கஸ்மீர் பண்டிற்கள் மற்றும் கஸ்மீர் முஸ்லீம் சமூகத்தவர்கள் மிகவும் வசதிப்பாடுகள் குறைந்த வீடுகளில் மன அழுத்தங்களுடன் தமது வாழ்வைக் கழிக்கிறார்கள்.

இவ்விரு சமூகத்தவர்களின் உடல், உளப் பாதிப்புக்கள் ஒன்றாக இருக்கின்ற போதிலும், கஸ்மீர் முஸ்லீம்களின் உயர் வகுப்பு சமூகத்தவர்கள் மட்டும் சொகுசாக வாழ்கிறார்கள்.

இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக பத்திரிகைத்துறை உள்ளது. 1990 களுக்கு முன்னர் இந்திய தேசிய பத்திரிகைகள் கஸ்மீர் இந்துக்கள் தொடர்பான செய்திகளையே அதிகம் முதன்மைப்படுத்தினர்.

ஆனால் தற்போது முஸ்லீம்கள் இங்கே அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்.

இதேபோன்றே, உள்ளுர் நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை போன்றவற்றிலும் முஸ்லீம்களே அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கஸ்மீர் பண்டிற்களின் தொகை குறைவாக இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் சிறிலங்காவில் வாழும் தமிழர்களை விட தமது சொந்த இடத்தில் இவர்கள் அதிக பயன்களைப் பெறுகின்றனர்.

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளரே போர்க்குற்ற காணொலிகளை இரகசியமாக விற்றாராம்

சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் காணொலிகள் கிடைத்துள்ளன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த காணொலியை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்பான இந்த காட்சிகள் அடங்கிய காணொலியில் நிச்சயமாக அந்த தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் ஜுலை 27ம் நாள் சனல் -4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலியில் உள்ளூர் தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இருக்கவில்லை.
அதில் சனல்-4 தொலைக்காட்சியின் சின்னம் மட்டுமே இருந்தது.

இதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொலிகள் பிரதி எடுக்கப்பட்டு சனல்-4 தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தொலைக்காட்சி குழுவினரே போர்க்களக் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தன் மீதும் உயிரை பணயம் வைத்து போர்க்களக் காட்சிகளை பதிவு செய்த ருபவாகினி ஊடகவியலாளரான சமன்குமார  ராமவிக்கிரம மீதும் சிலர் சேறு பூச முனைவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளின் மூலப்பிரதி சனல்- 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்- அந்தக் காட்சிகளைப் படம்பிடித்த அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ராமவிக்கிரமவே அவற்றை வெளிநாட்டு தொலைகாட்சிகளுக்கு விற்றிருப்பது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சமன்குமார ராமவிக்கிரம போர்முனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது புலிகளின் பல மடிக்கணினிகளையும் இலத்திரனியல பொருட்களையும் தனது வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றபோது மதவாச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை அரசாங்க தகவல் திணைக்களப் பணிபாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவே தலையிட்டு விடுவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் மீதான தாக்குதல்- கொழும்பில் எதிர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உதயன் செய்திஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதற்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரை நடத்தப்பட்ட போராட்டத்தில் பல்வேறு ஊடக அமைப்புகளையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

சிறிலங்கா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம்,சிறிலங்கா முஸ்லிம் ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம்,ஜனநாயகத்துக்கான ஊடக அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, மனோ கணேசன், அனோமா பொன்சேகா ஆகியோரும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சிவ்ராஜ் யாழ்ப்பாணம் வருகிறார்

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சிவ்ராஜ் அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் செப்ரெம்பர் 17ம் ,18ம் நாட்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் நேற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்த பின்னர் சுஸ்மா சிவ்ராஜ் இந்தத் தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.

தனது சிறிலங்காவுக்கான பயணத்தை யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் சுஸ்மா சிவ்ராஜ் கூறியுள்ளார்.

Monday, August 1, 2011

சமல் ராஜபக்ச குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

சமல் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்று ஐந்து நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றது.

இந்தக் குழுவினர் இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

சபாநாயகருக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசனங்களில் அமர்ந்த சிறிலங்கா குழுவினரை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் அறிக்கை ஒன்றை வாசித்த போது அதிமுக உறுப்பினர்கள் செம்மலை, முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் வெட்கம்... வெட்கம் என்று உரக்கக் குரல் எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் மேசைகளில் தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.லிங்கமும் இணைந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டதை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது சிறிலங்கா

சமல் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்று ஐந்து நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றது.

இந்தக் குழுவினர் இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

சபாநாயகருக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசனங்களில் அமர்ந்த சிறிலங்கா குழுவினரை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் அறிக்கை ஒன்றை வாசித்த போது அதிமுக உறுப்பினர்கள் செம்மலை, முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் வெட்கம்... வெட்கம் என்று உரக்கக் குரல் எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் மேசைகளில் தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.லிங்கமும் இணைந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

சனல்-4 குற்றச்சாட்டுக்கு எதிராக சிறிலங்கா வெளியிட்டுள்ள காணொலி

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக சனல்-4 தொலைக்காட்சி சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான காணொலி ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.

‘Lies Agreed Upon‘ என்ற தலைப்பிலான இந்தக் காணொலி 58 நிமிட நேரத்தைக் கொண்டது.

இந்தக் காணொலியில், போரின் மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் போர் வலயத்தில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் கூறிய கருத்துகளும், ஆயுதம் ஏந்தாத எவரும் கொல்லப்படவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொலை செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா ஒரு போராளி என்றும் இந்தக் காணொலியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் கூறும் வகையில் இந்தக் காணொலி தயாரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ள போதும், சனல்-4 இன் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான பரப்புரைகளே இதில் அடங்கியுள்ளன.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று இதனை ‘காணொலிப் போர்‘ என்று வர்ணித்துள்ளது.