பாலிவுட்டின் டாப் 50 பிரபலங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஜூம் டிவி. இது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சேனல்.
ஜூம் சூப்பர்நோவா பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 விவிஐபிகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த சேனல். இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் டிவி. 'ரஜினியைப் பொருத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் ('Rajinikanth who is a demigod unto himself').
முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது இந்த பாலிவுட் சேனல். ஷாரூக் கான் 4வது இடத்திலும், ஏஆர் ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில். இந்த டாப் 10 -பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14வது இடம் கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர்.Topics: rajini, supernova top 50, zoom, ரஜினி, ஜூம் டிவி